ரேஸில் வென்ற ரோஹித் சர்மா!…சூப்பர் ஆக்கி காட்டுவாரா சூர்யா?…

இரண்டரை நாளில் வங்கதேசத்தை வென்று டெஸ்ட் போட்டிகளில் பிரம்மிக்கத் தக்க வெற்றியை பெற்றுள்ளது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி. கான்பூரில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாததன் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் நான்காம், ஐந்தாம் நாட்களில் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது இந்திய அணி.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதை உறுதிபடுத்துவதை மனதில் வைத்துக் கொண்டு இந்திய வீரர்கள் அதிரடியை காட்டினர். இருபது ஓவர் போட்டியின் அனுகுமுறையை டெஸ்ட் போட்டியில் காட்டினர் ரோஹித் சர்மா தலைமையிலான வீரர்கள்.

இலங்கை மண்ணில் ஒரு நாள் தொடரில் சமீபத்தில் அடி வாங்கி வந்த இந்திய அணி பங்களாதேஷை பதம் பார்த்தது தனது சொந்த மண்ணில்.

Rohit Sharma

இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்று இருபது ஒவர் போட்டி தொடர் வருகிற ஆறாம் தேதி துவங்க உள்ளது.

முதல் போட்டி குவாலியரிலும், இரண்டாவது போட்டி ஒன்பதாம் தேதி டில்லியிலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத்தில் பன்னிரரெண்டாம் தேதியும் நடைபெற உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹார்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஸ் குமார் ரெட்டி, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவிபிஷ்னய், வருன் சக்கரவர்த்தி, ஜித்தேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ரானா, மயங்க்யாதவ் ஆகியோர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற இருபது ஓவர் தொடரை கைப்பற்றியது போல வங்கதேசத்தையும் வென்று காட்டுவாரா? கேப்டன் சூர்ய குமார் யாதவ் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.  இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய பிறகு இந்திய மண்ணில் வைத்து நடைபெற உள்ள முதல் தொடர் இதுவே என்பதனாலும் இந்த தொடர் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.

sankar sundar

Recent Posts

ரஜினிகாந்த் உடல் நிலை…பிரதமர் மோடி ஆர்வம்…விஜய் வாழ்த்து…

தமிழகத்தின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமழ் சினிமா ரசிகர்களை மட்டுமன்றி ஒட்டு…

28 mins ago

தோல்வியடைந்த திமுக அரசு…பலமான கூட்டணி அமையும் தமிழிசை நம்பிகை..

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தினை ஆட்சி செய்து…

1 hour ago

சொந்த வீடு வாங்க ரூ. 9 லட்சம் வரை கடன்.. இந்தத் திட்டம் பற்றி தெரியுமா?

பிரமதர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஆவாஸ்…

2 hours ago

சொந்த தொழில் தொடங்க ரூ. 50,000 கடன்.. ஈசியா வாங்குவது எப்படி?

தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுதவிர சுயதொழில் செய்பவர்களுக்கு எளிய முறையில் கடன்…

2 hours ago

ஓரே நாளில் ஓரவஞ்சனை காட்டிய தங்கம்…மீண்டும் தலை தூக்கியுள்ள விலை உயர்வு…

நேற்று சென்னையில் விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையை விட  இன்றைய விலை உயர்வை சந்தித்துள்ளது. நேற்றைய முன்தினம்…

2 hours ago

தன் அணிக்கு அட்வைஸ் கேட்ட முன்னாள் வங்கதேச வீரர்.. மைக்கில் வைத்து பங்கம் செய்த சுனில் கவாஸ்கர்

கான்பூர் டெஸ்ட் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அளவுக்கு இந்திய அணி சம்பவம் செய்தது. போட்டியின் போது…

3 hours ago