Connect with us

Cricket

ஆண்கள் அணியை பின் தொடரும் மகளிர்?…இந்தியாவில் தூள் பறத்தும் நியூஸிலாந்து கிரிக்கெட்டர்ஸ்…

Published

on

India

நியூஸிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடந்து வரும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டில் தோல்வியடைந்து தொடரையை இழந்து கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணி பல ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் சொதப்பல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க சமீபத்திய டி – 20 பெண்களுக்கான உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள நியூஸிலாந்து அணி, மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை எளிதாக வென்று சாதனை படைத்திருந்தது இந்திய அணி.

ஆடவர் அணி நியூஸிலாந்து அணியிடம் தோல்வியை தழுவிய நேரத்தில் பெண்கள் அணி நியூஸிலாந்தை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டி அகமதாபாத்தில் வைத்து நடந்தது.

டாஸில் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 259 ரன்களை எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணி. நியூஸிலாந்து அணியின் கேப்டன் டிவென் 86 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

260 என்ற கடினமான இலக்குடன் சேஸிங்கை துவங்கியது இந்திய அணி. ராதா யாதவ் தவிர எந்த பேட்ஸ்மேன்களும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

New Zealand

New Zealand

இதனால் இந்திய அணி 47.1 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நியூஸிலாந்து அணித் தலைவர் டிவென் 3 விக்கெட்டுகளை குவித்து ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வானார்.

இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தொடரில் சம நிலை பெற்றுள்ளதால், இந்த தொடரில் யார் சாம்பியன் பட்டம் வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போது எழுந்துள்ளது.

இதனை முடிவு செய்யக்கூடிய மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை குஜராத்தில் வைத்து நடக்க உள்ளது. கிரிக்கெட் இந்திய ஆடவர் அணி, நியூஸிலாந்து அணியிடம் வீழ்ந்து வேதனையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல் போட்டியில் வென்று ஆறுதலை தந்திருந்தது இந்திய பெண்கள் அணி.

ஆனால் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ஆண்கள் அணியை பின் தொடர ஆரம்பித்துள்ளதா மகளிர் கிரிக்கெட் அணி? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

google news