ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர் கோப்பையை வெல்லும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரை இறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறி அதிர்ச்சியளித்தது. நியூஸிலாந்து உலக சாம்பியன் பட்டத்தை தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கைப்பற்றியது.
அரை இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் போனாலும் இந்திய வீராங்கனைகள் ஐசிசி தர வரிசையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்கள்.
இருபது ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகள் தர வரிசையில் பேட்டிங், பவுலிங், ஆல்-ரவுண்டர் என மூன்றிலும் நிலையான இடத்தை பிடித்துள்ளனர்.
டி-20 போட்டி பேட்டர்களில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 5வது இடத்தை பிடித்திருக்கிறார். ஹர்மீத் ப்ரீத் கவுர், ஷிஃபாலி வர்மா முறையே 11, 12 இடத்தில் இருந்து வருகின்றனர். பவுலர்கள் பட்டியலில் தீப்தி ஷர்மா 3வது இடத்தில் இருக்கிறார்.
ஆல்-ரவுண்டர்கள் லிஸ்டில் 4வது இடத்தில் இருந்து வருகிறார் தீப்தி ஷர்மா. இதே போல 50ஓவர் ஒரு நாள் போட்டிகள் ஐசிசி ரேட்டிங்கில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 3வது இடத்திலும்ம் ஹர்மீத் ப்ரீத் கவுர் 9வது இடத்தையும் பிடித்துள்ளனர்.பவுலர்கள் லிஸ்டில் தீப்தி ஷர்மா 4வது இடத்தை பிடித்திருக்கிறார். தீப்தி ஷர்மா ஆல்-ரவுண்டகள் லிஸ்டில் 5வது இடத்தை பிடித்திருக்கிறார்.
15சர்வதேச அணிகளை கொண்டுள்ள ஒரு நாள் ரேட்டிங் லிஸ்டில் இந்திய மகளிர் அணி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. டி-20 தர வரிசையிலும் இந்திய பெண்கள் அணி 3வது இடத்திலும் இருக்கிறது.
சமீபத்திய உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்தாலும் ஒரு நாள் மற்றும் டி-20 இரண்டிலும் சர்வதேச ரேட்டிங்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணியே முதல் இடத்தில் இருந்து வருகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…