முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாரத் தாய் போன்றவர் என்று கேரளாவில் முதல் பாஜக எம்பி சுரேஷ் கோபி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றதன்மூலம் அம்மாநிலத்தின் முதல் பாஜக எம்பி என்கிற பெருமையை சுரேஷ் கோபி பெற்றார். இந்தநிலையில், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான கே.கருணாகரண் நினைவிடத்தில் சுரேஷ் கோபி மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் கோபி, `முன்னாள் முதல்வர்களாக ஈ.கே.நாயனாரும் கருணாகரணும் எனக்கு குருக்கள் போன்றவர்கள். எனது மரியாதையை கருணாகரனுக்கு செலுத்தவே இங்கு வந்தேன். இதற்கு அரசியல் உள்நோக்கம் எதுவும் கற்பிக்க வேண்டாம். ஈ.கே.நாயனார் மற்றும் அவரது மனைவி சாரதா டீச்சர் ஆகியோர்களைப் போலவே கருணாகரன் மற்றும் அவரது மனைவி கல்யாணிக் குட்டி அம்மா ஆகியோரிடமும் நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.
அவர்களின் குடும்பத்தில் ஒருவன் நான். கருணாகரண் கேரள காங்கிரஸ் தந்தை. அதேபோல், இந்திராகாந்தி பாரத் தாய் போன்றவர்’’ என்று பேசினார். சுரேஷ் கோபி வென்ற திருச்சூர் தொகுதியில் கருணாகரணின் மகன் கே.முரளிதரன் தேர்தல் முடிவில் மூன்றாவது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…