Connect with us

Cricket

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

Published

on

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த வாரம் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

இதன் தொடர்ச்சியாக இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி நிதானமாக ஆடியது.

முதல் நாள் உணவு இடைவேளை வரை அந்த அணி 74 ரன்களை மட்டுமே குவித்து இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இடையில் மழை காரணமாக போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது. பிறகு உணவு இடைவெளிக்குப் பின் போட்டி மீண்டும் துவங்கியது. பிறகு மீண்டும் மழை குறுக்கிட்டதால், நேற்றைய ஆட்டம் பாதியில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் நாளில் வங்கதேசம் அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை அடித்திருந்தது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு துவங்க இருந்தது. எனினும், தொடர் மழை காரணமாக இன்றைய போட்டி ஆரம்பிக்கப்படாமல் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது. மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகும் களத்தில் போட்டியை நடத்த முடியாத சூழல் நிலவி வந்துள்ளது.

இதனால் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு விட்டது. இன்றைய நாளில் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி நிறுத்தப்பட்டு இருப்பது ரசிகர்கள் மற்றும் இரு அணி வீரர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

google news