இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (செப்டம்பர் 19) துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்தியா மற்றும் வங்கதேசம் டெஸ்ட் போட்டி துவங்கும் முன்பே இந்திய பிட்ச் குறித்த விமர்சனங்கள் எழத் துவங்கின. இது குறித்த கேள்வியை எதிர்கொண்ட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தனக்கே உரிய பாணியில் பதில் அளித்து, விமர்சகர்களின் வாயை அடைத்துள்ளார்.
“இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லும் போது, டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களில் முடிந்துவிடும். அங்குள்ள பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டு இருக்கும், ஆனால் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இது குறித்த விவாதங்கள் முடிவுக்கு வர வேண்டும். இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் இரண்டு நாட்களில் முடிந்துவிடும் என்று கூறிவிட முடியாது. எதிரணி வீரர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக விளையாட கற்றுக் கொள்ள வேண்டும்.”
“எங்களது பேட்டிங் யூனிட் எத்தகைய சுழற்பந்துவீச்சையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டுள்ளது. ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. ஒருக்கட்டத்தில் இந்திய அணி பேட்டிங்கில் மிகவும் வலுவாக இருந்துவந்துள்ளது. தற்போது பும்ரா, ஷமி, அஷ்வின் மற்றும் ஜடேஜா போட்டியை பந்துவீச்சாளர்கள் பக்கம் திருப்பியுள்ளனர்,” என்று கவுதம் கம்பீர் தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…