Connect with us

govt update news

நம்முடைய ஓடிபி நம்பரை இப்படி கொடுக்கலாமா..? இந்த விஷயங்களை எல்லாம் நினைவில் வச்சுக்கோங்க…!

Published

on

Otp மோசடியில் நீங்கள் சிக்காமல் இருப்பதற்கு சில விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். அது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கல் அதிகரித்து வருகின்றது. இது எந்த அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகின்றதோ அதே அளவிற்கு சைபர் கிரைம் குற்றங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த சூழலில் ஓடிபி மோசடி என்பது ஸ்கேமர்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான ஒன்று. ஓடிபி என்பது பாதுகாப்பை அதிகரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால் நீங்கள் செய்யும் சில கவனக்குறைவான செயலால் அது உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றது.

இதை தவிர்ப்பதற்கு சில நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதை நீங்கள் கடைபிடித்தால் இந்த பிரச்சனையில் இருந்து எல்லாம் தப்பிக்க முடியும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பிஷிங் மற்றும் பிற ஆன்லைன் மோசடியில் இருந்து பாதுகாக்க மிகவும் உதவியாக இருக்கும். மோசடி செய்பவர்கள் நம்மை எவ்வாறு சிக்க வைக்கிறார்கள் எனவும் அதிலிருந்து நம்மை எப்படி பாதுகாக்கலாம் எனவும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஓடிபி மோசடி:

ஓடிபி என்பது மிகவும் பொதுவான மோசடி, இந்த மோசடி செய்பவர்கள் நம்முடைய ஓடிபி நம்பரை முதலில் பகிர சொல்லி கேட்பார்கள். இவை பொதுவாக ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு அல்லது உங்கள் கணக்குகளை அணுகுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. இந்த குறியீடுகள் எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும்.

இதற்காக மோசடி செய்பவர்கள் அடிக்கடி பிஷிங் மின்னஞ்சல் அல்லது வங்கிகள், இ காமர்ஸ் இணையதளங்கள் அல்லது சேவை வழங்குனர்கள் போன்ற நிறுவனங்களில் இருந்து உங்களை தொடர்பு கொள்வார்கள். மோசடி செய்பவர்கள் உங்கள் ஓடிபி நம்பரை ஏதேனும் ஒரு வழியில் பகிருமாறும் உங்கள் தொலைபேசி அல்லது சாதனத்தில் மிரரின் பயன்பாட்டை பயன்படுத்தி ஓடிபி நம்பரை பெறுமாறு கேட்பார்கள்.

இந்த சமயங்களில் நீங்கள் செய்ய வேண்டியது அவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் ஓடிபி நம்பரை பகிரக்கூடாது. முன்பின் தெரியாத அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களுக்கு தெரியாத யாருடனும் தனிப்பட்ட தகவல்களையும் ஓடிபி பகிரக்கூடாது.

எந்த ஒரு இணைப்பையும் கிளிக் செய்வதற்கு முன்பு மின்னஞ்சலுக்கு பதிலளிப்பதற்கு முன்பு எப்போதும் அனுப்புனரின் விவரங்களையும், முகவரியையும் சரி பார்ப்பது முக்கியம். அப்படி உங்களுக்கு வரும் மெசேஜ் ஃபிஷிங் மின்னஞ்சல் அல்லது செய்தி போல் தோன்றினால் அதை கிளிக் செய்யக்கூடாது.

எந்த நிறுவனமும் அல்லது சேவை வழங்கினரும் உங்கள் ஓடிபி நம்பரை செய்தி அல்லது மின்னஞ்சலில் பகிரும்படி கேட்க மாட்டார்கள். வலுவான கடவுச்சொல்லை பயன்படுத்தவும் அதை இரண்டு படி சரிபார்ப்பு விருப்பத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

ஏதேனும் மோசடி நடந்தால் உடனே இது தொடர்பாக புகார் கொடுக்க வேண்டும். இதை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் செயல்பட்டால் ஓடிபி மோசடியில் இருந்து எளிதில் உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *