Connect with us

Cricket

2011 உலகக் கோப்பை வென்ற இந்தியருக்கு 2025 ஐபிஎல்-இல் பயிற்சியாளர் பொறுப்பு..?

Published

on

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணிகள் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், வருகிற நவம்பர் மாதம் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த முறை ஐபிஎல் மெகா ஏலம் வெளிநாடுகளில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதன்படி மத்திய கிழக்கில் உள்ள துபாய், தோஹா அல்லது அபுதாபி ஆகியவைகளில் ஒரு இடத்தில் ஐபிஎல் ஏலம் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. எனினும், இதுகுறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் துபாயில் நடைபெற்றது. இந்தியா தவிர்த்து வெளிநாட்டில் வைத்து ஐபிஎல் ஏலம் நடைபெற்றது அதுவே முதல் முறை ஆகும்.

ஐபிஎல் ஏலத்திற்கான தேதிகள் நெருங்கி வரும் நிலையில், ஐபிஎல் அணிகள் வீரர்கள் தக்க வைப்பது குறித்த பிசிசிஐ-இன் அறிவிப்புக்காக காத்திருக்கின்றன. இந்த முறை எத்தனை வீரர்கள் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதை பொருத்து ஐபிஎல் அணிகள் அடுத்த சீசனுக்கான திட்டமிடல்களை துவங்க முடியும். எனினும், இந்த ஆண்டு இதுகுறித்த விதிகள் வெளியாக சற்று தாமதமாகும் என்று பிசிசிஐ சார்பில் ஐபிஎல் அணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எனினும், ஐபிஎல் அணிகள் வீரர்கள் தக்கவைப்பது தொடர்பான இறுதி முடிவை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் எடுக்க வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறுவதால் ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் மாற்றத்தை அதிகளவில் எதிர்பார்க்கலாம்.

ஒது ஒருபுறம் இருக்க, 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற வீரரான முனாஃப் பட்டேல் அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், அவர் எந்த அணிக்கு பயிற்சியாளராக இருப்பார் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் அடுத்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆகியுள்ளார்.

google news