Cricket
ஐபிஎல் 2025: வீரர்களுக்கு ஜாக்பாட், ஜெய் ஷா கொடுத்த பயங்கர அப்டேட்..!
ஐபிஎல் 2025 தொடரில் இருந்து வீரர்கள் சம்பாதிக்கும் தொகை சற்று அதிகரிக்க உள்ளது. இதற்காக பிசிசிஐ புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவருகிறது. இதுப்பற்றிய தகவல் ஐபிஎல் அணிகளுக்கு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. புதிய விதிமுறைகளின் படி ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களின் ஒப்பந்த மதிப்பு தவிர்த்து, அவர்கள் குறிப்பிட்ட அணியில் இருப்பதற்கு ஒவ்வொரு அணியும் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும்.
இதுப்பற்றிய அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு அணியும் போட்டி கட்டணமாக ரூ. 12.60 கோடியை செலுத்த வேண்டும். இந்தத் தொகை அணிகள் ஏலத்திற்காக செலவிடும் தொகையில் சேராது. ரூ. 12.60 கோடியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு போட்டிக்கு ரூ. 90 லட்சம் சேரும். 14 போட்டிகளுக்கு ரூ. 90 லட்சம் சேர்க்கும் போது மொத்த தொகை ரூ. 12.60 கோடியாக இருக்கும்.
முதற்கட்ட போட்டி கட்டண விவரங்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையிலும், அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், விரைவில் இதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ இடையே மும்பையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வீரர்களின் ஊதியம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் வைத்து அணிகள் வீரர்களை நிதி ரீதியில் ஊக்குவிப்பதன் அவசியம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.