ஐபிஎல் ஏலம் நடக்கும் தேதி, இடம் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.
2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் வரும் நவம்பர் 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. மேலும் இந்த ஏலம் சவுதி அரேபியாவில் நடக்க இருக்கின்றது . மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும். கடந்த 2022 ஆம் ஆண்டு மெகா ஏலம் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் நடைபெற உள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டு இருக்கின்றது. இதற்காக பிசிசிஐ குழு தற்போது சவுதி அரேபியாவிற்கு சென்றிருக்கின்றது. மேலும் எந்த இடத்தில் ஏலம் நடத்துவது என்பது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றது . அதன்படி வருகிற நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதி மெகா ஏலம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இதில் ஒரு சிக்கல் இருக்கின்றது. ஆஸ்திரேலியா இந்தியா போதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்படுகின்றது. அந்த வேலையில் ஐபிஎல் மெகா இடத்தை நடத்தினால் ஆஸ்திரேலியா போட்டிகளை யாரும் பார்க்க மாட்டார்கள்.
இதனால் தேதியை மாற்றுவதற்கு டிஸ்னி நிறுவனம் கோரிக்கை விடுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி அதிகாலை 5 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி அளவில் ஒரு மணிக்கு முடியும். இதனால் மெகா ஏலத்தை மதியம் தொடங்கி இரவு வரை நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்க போகிறார்கள் என்பது குறித்த தகவல் அக்டோபர் 31ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அந்தந்த அணிகளை சார்ந்தவர்கள் தெரிவிக்க வேண்டும் எனவும் பிசிசிஐ தெரிவித்து இருக்கின்றது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…