பிசிசிஐ இந்த விதியை மாற்றினால் தான் ஐபிஎல்2025ல் தோனி விளையாடுவார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

0
106
தோனி
தோனி

உலகெங்கிலும் இருக்கும் ஐபிஎல் ரசிகர்கள் கிரிக்கெட்டிற்காக அதை பார்ப்பதை விட எம் எஸ் தோனியின் எண்ட்ரிக்கு தான் பல ரசிகர்கள் ஐபிஎல் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த சீசனில் தோனி வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

10 அணிகள் விளையாடும் ஐபிஎல் தொடரில் அதிகளவில் சென்னை அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த அணியின் கேப்டனாக இருந்து வந்த தோனி இந்த ஆண்டு சீசனில் தன்னுடைய கேப்டன் பதவியை ருத்ராஜ் கெய்க்வாட்டிற்கு மாற்றி கொடுத்தார். இதைத்தொடர்ந்து சென்னை அணி பிளே ஆப் கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

இருந்தும் ருத்ராஜ் மீது தோனி மற்றும் சென்னை அணி நிர்வாகம் பெரிய அளவில் நம்பிக்கை வைத்துள்ளது. சில பல தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்த சீசனில் சென்னை அணி சரியான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க அடுத்த சீசனில் தோனி வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் அடுத்த சீசனில் மெகா ஏலம் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணியும் இதுவரை மூன்று உள்நாட்டு பேர் பிளேயர்களையும்,  ஒரு வெளிநாட்டு பிளேயர்கள் என நான்கு பேரை மட்டுமே தக்க வைக்க முடியும். அந்த வகையில் சென்னை அணி தோனியை தக்க வைப்பது சரியான முடிவாக இருக்காது.

இதனால் கேப்டனான ருத்ராஜ், ஜடேஜா, சிவம் துபே மற்றும் பத்திரனா ஆகியோரை மட்டுமே சென்னை அணி தக்க வைக்க முடிவு செய்திருக்கிறது. இருந்தும் பிசிசிஐ தரப்பிலிருந்து தக்க வைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை ஐந்து முதல் ஆறாக மாற்றினால் தோனியும் தக்க வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று பிற்பகலில் நடக்க இருக்கிறது. இதில் இது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணியின் வீரராக தோனி நீடிக்க வில்லை என்றாலும் மென்டராக வரவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here