Cricket
ஐபிஎல் 2025.. ரிடென்ஷன் முதல் ஆர்டிஎம் வரை.. வெளியான சூப்பர் தகவல்கள்..
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. மெகா ஏலம் துவங்கும் முன்பே, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அணிகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது குறித்த விதிமுறைகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் ஐந்து வீரர்களை தங்களது அணியில் தக்கவைத்துக் கொள்ள பிசிசிஐ அனுமதிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும், அடுத்த சீசன் துவங்கி வீரர்களை தக்க வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படும் “ரைட் டு மேட்ச்” விதிமுறை நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை அணிகளால் ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உருவாகும் பட்சத்தில் அது மற்ற அணிகளை விட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெருமளவு சாதகமாக அமையும். மும்பை இந்தியன்ஸ் அணி விரும்பும் பட்சத்தில் நட்சத்திர வீரர்களான- ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை அடுத்த சீசனிலும் தக்க வைத்துக் கொள்ளலாம்.
ஐபிஎல் மெகா ஏலத்தை பொருத்தவரை இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத துவக்கத்தில் 2025 ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இதற்கான விதிமுறைகள் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் பிசிசிஐ சார்பில் வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் இதுவரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலம் நடைபெற்றுள்ளது. முதல் முறை 2014 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்டது.