Categories: Cricketlatest news

அன்கேப்டு ரூல் தோனிக்காக தான் மாற்றப்பட்டதா..? ஐபிஎல் தலைவர் சொன்ன முக்கிய தகவல்…!

ஐபிஎல் 2025 ஆம் போட்டியில் ஒவ்வொரு ஆணியும் எத்தனை வீரர்களை தக்க வைக்க முடியும் என்ற கேள்வி நீடித்து வந்தது. இதற்கு சமீபத்தில் பிசிசிஐ நிறுவனம் விளக்கம் கொடுத்திருந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் தங்களிடம் இருக்கும் 6 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றும் அதில் ஒரு வீரர் அன்கேப்டு வீரராக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி அன்கேப்டு விதிமுறை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த எம்எஸ் தோனி ஐபிஎல்-லில் அடுத்த சீசனில் விளையாடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தோனியை மீண்டும் விளையாட வைக்க தான் இந்த விதியை கொண்டு வந்ததாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு ஐபில் தலைவர் அருன் துமால் கூறியிருந்ததாவது: “ஒரு போட்டிக்கு திட்டமிடுதல் வரும்போது தோனியை விட சிறந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது.

அவர் கேப்ட்டு வீரராக இருந்தாலும் அவர் எந்த தொகைக்கு கிடைத்தாலும், ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு தோனியை தங்களது அணியில் தேர்வு செய்யவே விரும்புவார்கள். எம்எஸ் தோனி இந்த அன்கேப்டு வீரர் விதிக்கு பொருந்துவார் என்று நான் நினைக்கவில்லை. இது எங்கள் அனைத்து வீரர்களுக்குமான விஷயம். ஏராளமான இளம் வீரர்கள் இந்திய அணியில் தேர்வாகி இருக்கிறார்கள்.

பல மூத்த வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடும் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள். தற்போதும் ஐபிஎல்லில் விளையாடி கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து வெளியேறி விட்டார்கள்.

இருப்பினும் ஐபிஎல் தொடரில் சிறந்து விளையாடி வருகிறார்கள். அன்கேப்டு விதிமுறை என்பது கிரிக்கெட் மீது ஆர்வம் காட்டி ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாட தங்களை தயாராக வைத்துக் கொள்ளும் வீரர்களுக்கானது. மேலும் அன்கேப்டு விதிமுறை மீண்டும் கொண்டு வந்ததற்கு எம் எஸ் தோனி தான் முக்கிய காரணம் என்று சொல்லிவிட முடியாது’ என அவர் தெரிவித்து இருக்கின்றார்.

Ramya Sri

Recent Posts

ரேஸ்ல நாங்களும் இருக்கோம்!…கிரிக்கெட்டில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்…

ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…

1 hour ago

18-வது இரட்டை சதம்… ஜாம்பவான்களின் பட்டியல் வரிசையில் இணைந்த புஜாரா…!

18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…

1 hour ago

மொதல்ல உடம்ப குறைச்சிட்டு வா… சேட்டை செய்த வீரரை வீட்டுக்கு அனுப்பிய மும்பை அணி..!

பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…

1 hour ago

கூகுள் பே, போன் பே ஆப்-க்கு எச்சரிக்கை… யுபிஐ-க்கு பதிலா இத பயன்படுத்திக்கோங்க..!

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…

2 hours ago

தீபாவளி சேலில் கலக்கும் விவோ 5ஜி போன்… அதுவும் ரொம்ப கம்மி விலையில்… செக் பண்ணி பாருங்க..!

Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள்…

3 hours ago

மார்க் ஆண்டனியா இது!..இப்படி கூட நடிச்சிருக்காரா?…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய படம் "மார்க் ஆண்டனி". இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்தி…

3 hours ago