Categories: Cricketlatest news

கம்பீர் மீது சூதாட்டப் புகாரா…? 9 ஐபிஎல் அணிகள் பிசிசிஐயிடம் கடிதம்… எழுந்த புது சர்ச்சை…!

ஐபிஎல் ஒரு அணி எத்தனை வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்பது தொடர்பான தகவலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. ஒரு அணி ஆறு வீரர்களை தக்க வைக்கலாம் எனவும் அதில் ஒரு வீரர் நிச்சயம் அண்கேப்ட் வீரராக இருக்க வேண்டும் என்று பிசிசிஐ திட்டமிட்டமாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற வங்கதேச t20 போட்டியில் ஹர்ஷிப் ராணா, நிதிஷ் ரெட்டி ஆகிய இருவரும் அறிமுக வீரர்களாக களமிறங்கி இருந்தார்கள்.

இதில் நிதிஷ் ரெட்டிக்கு களமிறங்கும் வாய்ப்பு கிடைத்ததால் அவர் அன்கேப்ட் வீரர் என்பதை இழந்திருக்கின்றார். வங்கதேசத்திற்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் ஹர்ஷித் ரானா விளையாடவில்லை. இந்தியா இரண்டு போட்டிகளிலும் வென்று விட்டதால் கடைசி போட்டியில் விளையாடாதவர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் கடைசி போட்டியிலும் ஹர்ஷித் ராணா விளையாடவில்லை.

காய்ச்சல் என்று கூறி வீடு திரும்பி விட்டதாக தகவல் வெளியானது. அதனால் அவர் இன்னும் அன்கேப்ட் வீரராகவே இருந்து வருகின்றார். இவரை கொல்கத்தா அணி சுலபமாக தக்க வைத்துக்கொள்ள முடியும். இந்நிலையில் தற்போது ஹர்ஷித் ராணாவை கம்பீர் திட்டமிட்டு தான் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார் என்றும், அவருக்கு காய்ச்சல் என்பதை எதை வைத்து உறுதி செய்வது மருத்துவ அறிக்கையும் கிடையாது என்று மற்ற ஐபிஎல் அணி நிர்வாகிகள் பிசிசிஐ இடம் புகார் அளித்துள்ளார்கள்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக இருந்துவிட்டு இந்தியா அணி பயிற்சியாளராக மாறி இருக்கும் கௌதம் கம்பீர் இன்னும் ஐபிஎல் அணிக்கு உதவி தான் செய்கின்றார் என்று புகார் அளித்திருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து கொல்கத்தா அணியை தவிர மற்ற 9 ஐபிஎல் அணிகளும் பிசிசிஐக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், உண்மை காரணம் என்ன? அவருக்கு உண்மையிலேயே காய்ச்சல் என்றால் மருத்துவ அறிக்கை போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரை விளையாட வைக்காமல் வீட்டிற்கு அனுப்பியதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஐபிஎல் அணிகள் புகார் கூறியிருக்கிறார்கள். இது கௌதம் கம்பீருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

Ramya Sri

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago