Categories: Cricketlatest news

மூன்று பார்மேட்டிலும் கேப்டனாக்கப்படும் இளம் வீரர்… கம்பீரின் புதிய பிளான் இதானா?

இந்திய கிரிக்கெட்டில் கவுதம் கம்பீர் தலைமையில் புதிய வரலாறு உருவாகி இருக்கும் நிலையில், ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு சுப்மன் கில்லை கேப்டனாக மாற்ற திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதை கருத்தில் வைத்து தான் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். செப்டம்பரில் நடக்க இருக்கும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவுக்கு கீழ் துணை கேப்டனாக கில் செயல்பட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் சீரிஸில் ஜஸ்பிரிட் பும்ராவிற்கு பதில் சுப்மன் கில்லை துணை கேப்டனாக்கவும் திட்டமிட்டுள்ளனர். இரண்டு டெஸ்ட் மேட்சுகளும் இந்தியாவில் நடக்க இருக்கிறது. இதில் செப்டம்பர் 19ந் தேதி எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியம், சென்னையில் இந்த டெஸ்ட் நடக்க இருக்கிறது. அடுத்த டெஸ்ட் செப்டம்பர் 27ந் தேதி நாக்பூரில் இருக்கும் க்ரீன் பார்க் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், அக்டோபரில் இந்தியாவில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கில் துணை கேப்டனாக நியமிக்கவும் இருக்கிறார். தொடர்ச்சியாக கில்லிற்கு அணியில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதுகுறித்து பிசிசிஐ தேர்வுக்குழு அதிகாரி அஜித் அகர்கர் சமீபத்தில் பேசி இருந்தார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, டி20 உலக கோப்பை போட்டிகள் போது ஹர்திக் பாண்டியா காயமடைந்தார். அதுமட்டுமல்லாமல், ரோஹித் சர்மாவும் சரியாக விளையாடாமல் இருந்தார். சவாலாக இருந்தது. ஆனால் ரோஹித் கேப்டனாக வழிநடத்தினார். இதைபோன்ற ஒரு சூழ்நிலையை இந்திய அணி சந்திக்க கூடாது. சுப்மன் கில் மூன்று ஃபார்மேட்களிலும் விளையாட கூடிய வீரர்.

அந்த திறமையை எப்போதுமே காட்டிக்கொண்டு இருப்பார். முன்னணி வீரர்களிடம் அனுபவம் இருந்தாலும் அவர்களுக்கு காயம் ஏற்படும் போது திடீரென கேப்டனைத் தேடும் சவால்கள் இருக்க கூடாது. சுப்மன் ஒழுக்கமான தலைமைப் பண்புகளைக் காட்டியுள்ளார். அதனால் அவருக்கு நாங்கள் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தினை கொடுக்க விரும்புகிறோம் என்று கூறினார்.

AKHILAN

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

19 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago