Categories: Cricketlatest news

இந்திய அணியில் ரீ-என்ட்ரி.. கவனம் ஈர்க்கும் இஷான் கிஷன் பதிவு

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்பிரைஸ் என்ட்ரி கொடுத்த இஷான் கிஷன் இந்தியா சி அணிக்காக துலீப் கோப்பை தொடரில் விளையாடினார். கடைசி நிமிடங்களில் அணியில் சேர்க்கப்பட்ட இஷான் கிஷன் நீண்ட இடைவெளிக்கு பின் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் களமிறங்கி விளையாடிய புகைப்படங்களுடன் இன்ஸ்டா பதிவை பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பான பதிவில் இந்தியா சி அணிக்காக துலீப் கோப்பையில் தான் விளையாடிய இன்னிங்ஸின் புகைப்படங்களை இணைத்து, அத்துடன் “Unfinished Business” என குறிப்பிட்டுள்ளார். இதையொட்டி அவர் துலீப் கோப்பையை தொடர்ந்து டெஸ்ட் அணியில் விளையாட வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் உள்ளது.

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பி அணிக்கு எதிராக விளையாடிய இஷான் கிஷன் முதல் தர கிரிக்கெட்டில் தனது ஏழாவது சதத்தை நிறைவு செய்தார். இதில் 14 பவுண்டரிகள் இடங்கும். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய இஷான் கிஷன் பாபா இந்திரஜித் உடன் இணைந்து 189 ரன்களை சேர்த்தார். பாபா இந்திரஜித் தன் பங்கிற்கு 136 பந்துகளில் 78 ரன்களை குவித்தார்.

இந்தியா சி அணியில் கடைசி நிமிடங்களில் சேர்க்கப்பட்ட இஷான் கிஷன், துலீப் கோப்பை தொடரின் முதற்கட்ட போட்டிகளில் காயம் காரணமாக இந்தியா டி அணிக்காக விளையாட முடியாத சூழல் உருவானது. இவருக்கு பதிலாக அந்த போட்டியில் சஞ்சு சாம்சன் களமிறங்கி விளையாடினார்.

தற்போது இரண்டாம் கட்ட துலீப் கோப்பை போட்டிகளில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் இடையிலான போட்டியில் இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி உள்ளார். எனினும், இந்த போட்டி சமனில் முடிந்தது.

Web Desk

Recent Posts

ஐந்து நாட்களுக்கு கன மழை?…அலெர்ட் சொன்ன ஆய்வு மையம்…

தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

5 hours ago

வாஷ்-அவுட் தானா ப்ளான்?…அட்டாக் மூடில் இந்திய அணி…

இந்திய - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. மழை குறுக்கீடு,…

6 hours ago

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி…அக்டோபர் நான்காம் தேதி ஆஜராக உத்தரவு…

தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆளுநர் முன்பு பதவி ஏற்பு விழாவும் நடந்து முடிந்தது. முன்னாள் அமைச்சர்…

7 hours ago

பெரியாரின் தொண்டனாக பெருமை…உதயநிதியை வாழ்த்திய நடிகர் சத்யராஜ்…

தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர். அமலாக்கத்துறை வழக்கிலிருந்து ஜாமீனில் விடுதலையான செந்தில் பாலாஜி…

11 hours ago

துவங்கியது நான்காம் நாள் ஆட்டம்…வங்கதேசம் தடுமாற்றம்…

இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர்…

12 hours ago

பிஎம் ஜெய் திட்டம்.. மோடிக்கு பறந்த கடிதம்.. முக்கிய ஹைலைட்ஸ்

மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆகியவற்றின் கீழ்,…

12 hours ago