இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இணைந்து புதிய சாதனை படைத்துள்ளனர். இந்த ஜோடி ஒரு போட்டியில் ஏழு விக்கெட்களுக்கும் அதிகமாக வீழ்த்திய முதல் இந்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் எனும் அரிய சாதனையை படைத்தது.
“இந்த ஆடுகளம் சீம் பந்துவீச்சுக்கு உகந்ததாக இருக்கும் என்றே நினைத்தேன், எங்கள் தரப்பில் நாங்கள் ஏழு விக்கெட்களை வீழ்த்தியது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. களத்தில் ஸ்பின்னிங் இருந்தது, மேலும் பந்து ஒரளவுக்கு பவுன்ஸ் ஆனது. போட்டிகள் இருப்பது எப்போதும் நல்ல விஷயம், ஒருங்கிணைந்து பணியாற்றவே நாங்கள் முயற்சிக்கிறோம்,” என்று குல்தீப் யாதவ் போட்டிக்கு பிறகு பேசினார்.
வெஸ்ட் இன்டீஸ் மற்றும் இந்தியா அணிகள் இடையே நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்த சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது. பார்படோஸ்-இல் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் மூன்று ஓவர்கள் பந்துவீசி வெறும் ஆறு ரன்களை விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்களை கைப்பற்றினார்.
ஆறு ஓவர்கள் பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 37 ரன்களை கொடுத்து மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி மட்டுமே ஏழு விக்கெட்களை கைப்பற்றியது. இவர்கள் தவிர ஹர்திக் பான்டியா, முகேஷ் குமார் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இன்டீஸ் அணி துவக்கம் முதலே ரன் குவிப்பில் ஈடுபட்டது. எனினும், மறுபக்கம் விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்து கொண்டே வந்தது. இந்திய பவுலிங்கின் தாக்கம் காரணமாக வெஸ்ட் இன்டீஸ் அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பிறகு எளிய இலக்கை துரத்திய இந்திய அணியின் துவக்க வீரரான இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 46 பந்துகளில் 52 ரன்கள் (ஏழு பவுன்டரிகள், ஒரு சிக்சர்) விளாசிய இஷான் கிஷன் பெவிலியனர் திரும்பினார். இவருடன் களமிறங்கிய சுப்மன் கில் வெறும் ஏழு ரன்களுக்கு நடையை கட்டினார்.
அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 19 ரன்களையும், ஹர்திக் பான்டியா 5 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். ரவீந்திர ஜடேஜா 16 ரன்களையும், கேப்டன் ரோகித் ஷர்மா 12 ரன்களை அடித்து 22.5 ஓவர்களில் வெற்றி இலக்கை இந்திய அணி எட்டியது. இந்திய அணி ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஒரு வெற்றியுடன் முன்னிலை பெற்று இருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…