கிரிக்கெட் அரங்கில் வலிமை மிக்க அணியாக இந்தியா உள்ளது. கடந்த காலங்களில் இந்திய அணி வீரர்கள் தங்களது அசாத்திய சாதனைகள் மற்றும் போட்டி திறன் காரணமாக லெஜண்ட் அந்தஸ்த்தை பெற்றுள்ளனர். எனினும், கிரிக்கெட்டில் ஃபிட்டான வீரர் யார் என்ற கேள்வி எப்போதும் கேட்கப்படும் ஒன்றாகவே இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க இந்திய அணியில் வீரர்களின் ஃபிட்னெஸ் விஷயத்தில் அதிக கவனம் செலுத்திய கேப்டன்களில் ஒருவராக விராட் கோலி இருக்கிறார். இவர் தலைமையிலான இந்திய அணியில் வீரர்கள் அனைவரும் ஃபிட்டாக இருப்பது அவசியம் என்ற முறையை கொண்டுவந்தார். அதன்பிறகு இந்திய அணி படைத்த சாதனைகள் பல எனலாம்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட்டில் ஃபிட்டான வீரர் யார் என்ற கேள்வியை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சமீபத்தில் எதிர்கொண்டார்.
இந்த கேள்விக்கு அவர் அனைவரும் எதிர்பார்த்த பதில் எது என்பதை நன்கு தெரிந்திருந்தும், தன்னை பொருத்தவரையில் யார் ஃபிட்டெஸ்ட் கிரிக்கெட்டர் என்பதை மனம்திறந்து தெரிவித்தார். இவர் அளித்த பதில் இணையத்தில் புயலையே கிளப்பியுள்ளது.
“நீங்கள் அனைவரும் எதிர்பார்க்கும் பதில் எனக்கு தெரியும், ஆனால் நான் இதற்கு என் பெயரைத் தான் பதிலாக கூறப் போகிறேன். ஏனெனில் நான் வேகபந்து வீச்சாளர். நான் சில காலமாக விளையாடி வருகிறேன்.”
“வேகப்பந்து வீச்சாளராக இருந்து நாட்டிற்காக விளையாடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. இதனால், நான் எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களைத் தான் கூறுவேன். அந்த வகையில், இந்த கேள்விக்கு நான் என் பெயரை எடுத்துக் கொள்கிறேன்,” என்று சமீபத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…