Connect with us

Cricket

எப்போதான்யா வருவ பூம்ரா?..விளக்கம் அளித்த ஜஸ்பிரித் பூம்ரா..

Published

on

Jasprit-Bumrah

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா எப்போது அணிக்கு திரும்புவோர் என்று இந்திய அணி மற்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிகிச்சை பெற்று வந்த ஜஸ்ப்ரீத் பும்ரா, இந்திய அணிக்கு திரும்புவது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டு உள்ளார். இவரது பதிவு வலைதளம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.

சமீபத்திய இன்ஸ்டா பதிவில், தான் பயிற்சியில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைத்து, பின்னணியில் “I’m Coming Home” என்ற பாடலை சேர்த்திருக்கிறார். மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் ஐடி-யை டேக் செய்து இருக்கிறார். இவரது இந்த பதிவு, இந்திய அணிக்க திரும்ப உடல்நிலை சீராக இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்து இருக்கிறது.

Jasprit-Bumrah1

Jasprit-Bumrah

எப்போது அணிக்கு திரும்புவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜஸ்ப்ரீத் பும்ராவின் இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்கள் மத்தியில் புது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் விரைவில் நடைபெற இருக்கும் ஐயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலேயே ஜஸ்ப்ரீத் பும்ரா இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ஜஸ்ப்ரீத் பும்ரா, அப்போது முதலே இந்திய அணியில் விளையாடாமல் இருக்கிறார். முன்னதாக இணையத்தில் வெளியாகி இருந்த தகவல்களில், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆசிய கோப்பை 2023 தொடருக்கு தயாராகி விடுவார் என்று கூறப்பட்டது.

Jasprit-Bumrah

Jasprit-Bumrah

எனினும், இவரின் அசாத்திய பயிற்சி காரணமாக அடுத்த மாதம் நடைபெற இருக்கும் ஐயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலேயே அவர் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் வெளியான தகவல்களின் படி. ஜஸ்ப்ரீத் பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை துவங்கி விட்டதாகவும், விரைவில் சில பயிற்சி ஆட்டங்களை விளையாட இருப்பதாகவும் கூறப்பட்டது.

Jasprit-Bumrah

Jasprit-Bumrah

“இதுபோன்ற காயங்களுக்கு, தொடர்ச்சியான கண்காணிப்பு அவசியம் என்பதால், குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் விதிப்பது சரியாக இருக்காது. ஆனால், பும்ரா சிறப்பாக உடல்நலம் தேறி வருகிறார். என்.சி.ஏ. நெட்களில் அதிகபட்சம் ஏழு ஓவர்கள் வரை அவர் பந்து வீசினார். எளிமையான உடற்பயிற்சிகளில் இருந்து, இது கணிசமான வளர்ச்சி தான். ஆரம்பத்தில் இதுபோன்ற பந்து வீச்சு பயிற்சி தான் சரியானது. அடுத்த மாதம் இவர் என்.சி.ஏ.-வில் சில பயிற்சி போட்டிகளில் விளையாடுவார். அந்த போட்டிகளின் அடிப்படையில் அவரின் உடற்தகுதி பற்றி ஆய்வு செய்யப்படும்,” என்று இதுபற்றிய விவரம் அறிந்த தகவல்கள் தெரிவித்தன.

“இவரை அவசரப்படுத்த முடியாது. என்.சி.ஏ.-வில் பயிற்சி போட்டியில் விளையாடுவதன் மூலம், அவரின் உடல் போட்டிக்கு ஏற்ப அவரை தயார்படுத்தும். ஆனால், எடுத்ததும் வெளிநாட்டு போட்டிகளில் களமிறங்க செய்யாமல், அவர் சில உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும்,” என்று இந்திய அணிக்கான முன்னாள் உடற்தகுதி பயிற்சியாளர் ராம்ஜி ஸ்ரீனிவாசன் தெரிவித்து இருக்கிறார்.

google news