Cricket
அவ்ளோ லேட் ஆகாது.. பும்ரா சீக்கிரமே வந்திடுவாரு.. பி.சி.சி.ஐ. கொடுத்த சூப்பர் அப்டேட்..!
இந்திய அணி ஐயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக தனியாக இரண்டாவது அணி உருவாக்கப்படுகிறது. இந்த அணியில் காயத்தில் இருந்து மீண்டு இருக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை அடிப்படையில் ஜஸ்ப்ரித் பும்ரா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறக்கப்படுவார் என்று பி.சி.சி.ஐ. தலைவர் ஜெய் ஷா தெரிவித்து இருக்கிறார்.
ஜஸ்ப்ரித் பும்ரா தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஐயர்லாந்து அணியுடனான தொடரில் களமிறங்குவது பற்றி முடிவு எடுக்கும் முன், ஜஸ்ப்ரித் பும்ரா சில பயிற்சி போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐயர்லாந்து தொடரில் பும்ரா பங்கேற்பது குறித்து ஜெய் ஷா கூறியதாவது..,
“ஜஸ்ப்ரித் பும்ரா முழு உடற்தகுதி பெற்றிருக்கிறார், அவர் ஐயர்லாந்துக்கு செல்லலாம். ஐயர்லாந்து சுற்றுப் பயணம் தவிர இதர போட்டிகளுக்கான தேர்வில் சீரான முடிவு எடுக்கப்படும். மற்ற கிரிக்கெட் ஆணையங்கள் நலனுக்காக, நாம் எல்லா பகுதிகளுக்கும் செல்ல வேண்டியிருக்கும். கிரிக்கெட் இருக்கும் இடங்களில் எல்லாம், காயங்கள் மிகவும் சாதாரன ஒன்று தான். மற்ற கிரிக்கெட் ஆணையங்கள் பற்றியும் எண்ண வேண்டியது அவசியம் ஆகும்.”
“சமீபத்தில் தான், சத்தேஷ்வர் புஜாரா மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற மூத்த வீரர்கள் துலீப் கோப்பையில் விளையாடினார்கள். தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் இந்திய அணியில் இடம்பெறாத வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும். 80 சதவீத வீரர்கள் பிட்னஸ் பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளனர்.” என்று அவர் தெரிவித்தார்.
உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பு 12 ஒருநாள் போட்டிகள் உள்ளன. இவைகளில் அணி தேர்வு சீராக இருக்கும். இதனிடையே இந்தியா ஏ அணி தென் ஆப்பிரிக்கா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுடன் மோத இருக்கிறது. உலக கோப்பை இறுதியில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றதை போன்றே இந்தியா ஏ அணி தென் ஆப்பிர்க்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது.
இதுதவிர இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் சீரிசில் விளையாட இருக்கிறது. அனைத்து மூத்த வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது அவசியம் ஆகும்.