Cricket
கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.. உனத்கட் Comeback-ல இப்படி ஒரு சாதனை இருக்கா பா..?
வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஜெயதேவ் உனத்கட் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். அணியில் சேர்க்கப்பட்டதால் ஜெயதேவ் உனத்கட் கிரிக்கெட் உலகில் வித்தியாசமான சாதனையை படைத்திருக்கிறார். வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கியதன் மூலம், உனத்கட் 3 ஆயிரத்து 539 நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்கினார்.
அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒருநாள் போட்டியில் களமிறங்கிய வீரர் என்ற பெருமையை ஜெயதேவ் உனத்கட் பெற்று இருக்கிறார். கடைசியாக நவம்பர் 21, 2013 ஆண்டு ஜெயதேவ் உனத்கட் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் களமிறங்கினார். அந்த வரிசையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம் பிடித்த வீரர் என்ற பெருமையை உனத்கட் பெற்றார்.
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இன்டீஸ் அணியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்திய அணியில் அக்சர் படேலுக்கு மாற்றாக ருதுராஜ் கெய்க்வாட், உம்ரான் மாலிக்-க்கு மாற்றாக ஜெயதேவ் உனத்கட் சேர்க்கப்பட்டனர். ருதுராஜ் கெய்க்வாட் தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய நிலையில், ஜெயதேவ் உனத்கட் கிட்டதட்ட பத்து ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் களமிறங்கினார்.
இது ஜெயதேவ் உனத்கட் களமிறங்கும் எட்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆகும். முன்னதாக வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிராக நவம்பர் 2013-இல் கொச்சியில் நடைபெற்ற போட்டியில் ஜெயதேவ் உனத்கட் களமிறங்கினார். இவரது முதல் ஒருநாள் போட்டி பிரைன் லாரா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. மூன்றாவது ஒருநாள் போட்டியும், இதே ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஜெயதேவ் உனத்கட் மீண்டும் சேர்க்கப்பட்டு இருந்தார். அது கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பிடித்தார். இந்திய அணியில் அதிக டெஸ்ட் போட்டிகளை தவறவிட்ட வீரர் என்ற பெயரை ஜெயதேவ் உனத்கட் பெற்று இருக்கிறார்.
டிசம்பர் 16, 2010 ஆண்டு ஜெயதேவ் உனத்கேட் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் களமிறங்கினார். அதன்பிறகு 118 டெஸ்ட் போட்டிகளில் ஜெயதேவ் உனத்கட் இடம்பிடிக்கவில்லை. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளை தவறவிட்ட இரண்டாவது வீரராக ஜெயதேவ் உனத்கட் உள்ளார். இங்கிலாந்து அணியின் கரேத் பேட்டி 142 போட்டிகளை தவற விட்டு, இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.