latest news
அதிக அளவு டேட்டாவை தரும் ஜியோவின் புதுத்திட்டம்.. அப்படி என்ன இருக்கு இதுல?..
ஜியோ நிறுவனமானது அவ்வப்போது புதுபுது திட்டங்களை வழங்கி கொண்டுதான் உள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் பெரும்பாலும் அதிக அளவு டேட்டாவை தருவதாகவே இருக்கும். அப்படியான இரு திட்டத்தினை ஜியோவானது தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களை பற்றி இப்போது காணலாம்.
ரூ. 219க்கான திட்டம்:
ரூ. 219க்கான இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் நாம் அன்லிமிடெட் கால், ஒரு நாளுக்கு 3ஜிபி டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோக்ளொவ்டு ஜியோ செக்யூரிட்டி என ஜியோவின் அனைத்து செயலிகளையும் அக்சஸ் செய்யும் வசதியினை கொடுக்கிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக 2ஜிபி டேட்டாவை நாம் அனுபவிக்கலாம்.
ரூ. 399க்கான திட்டம்:
28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தின் விலை ரூ. 399. இந்த திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒரு நாளுக்கு 100 எஸ்.எம்.எஸ், ஒரு நாளுக்கு 3ஜிபி டேட்டாவையும் தருகிறது. 28 நாட்களுக்கு 3ஜிபி எனில் மொத்தம் 84 ஜிபி ஆகும். ஆனால் ஜியோவானது கூடுதலாக 6 ஜிபியை அளித்து மொத்தமாக 90ஜிபியை தருகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் நாம் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ க்ளொவ்ட்(Jio cloud) என அனைத்து வசதிகளையும் அனுபவிக்க முடியும்.
ரூ. 999க்கான திட்டம்:
84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் நமக்கு கூடுதலாக நமக்கு 40ஜிபி டேட்டாவை பெறலாம். மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒரு நாளுக்கு 100 எஸ்.எம்.எஸ்கள், ஒரு நாளுக்கு 3ஜிபி டேட்டாவையும் நாம் அனுபவிக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் நமக்கு 292ஜிபி டேட்டா கிடைகின்றது. எனவே ஜியோவின் இந்த வகை திட்டங்களை ஆக்டிவேட் செய்து நமது பணத்தினை மிச்சப்படுத்தலாம்.