Connect with us

latest news

குறைய போகும் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள்… செம குஷியில் வாடிக்கையாளர்கள்…!

Published

on

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்த வருடம் ஜூலை மாதம் இந்தியாவில் இருக்கும் பல தொடர் தொடர்பில் நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி இருந்தது. பல நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்தன. தற்போது மீண்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணத்தை குறைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு திட்டங்களின் கட்டணங்களை குறைப்பதற்கு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகின்றது. கடந்த ஜூலை மாதம் இந்த முன்னணி டெலிகிராம் நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்டு திட்டங்களின் கட்டணங்களை அதிகரித்தது.

இதனால் வாடிக்கையாளர்கள் குறைந்த ரீசார்ஜ் கட்டணங்களை வசூலிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பக்கம் தாவி வருகிறார்கள். இதனால் டெலிகிராம் நிறுவனங்கள் தங்களின் நலனுக்காக இந்திய செவிலியர் ஆபரேட் சங்கம் அரசிடம் கோரிக்கை வைத்திருக்கின்றது. தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மீது உரிமை கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலனை செய்யும் படி மனு அளித்துள்ளது.

இந்த கோரிக்கையை அரசு ஏற்கும் பட்சத்தில் ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை குறைப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களின் விலையை விரைவில் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தி வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்த ஜூலை மாதம் தொடர்ந்து அடுத்தடுத்து நிறுவனங்கள் தங்களது சேவை கட்டணங்களை அதிகரித்து காரணத்தால் பொதுமக்கள் அனைவரும் பிஎஸ்என்எல் பக்கம் தாவினார்கள். அவர்களை எல்லாம் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக அரசின் உதவியை நாடியிருக்கின்றது முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள்.

google news