Connect with us

latest news

மீண்டும்… மீண்டுமா – கொரோனாவால் முடங்கிய ஜோபைடன் பரப்புரை!

Published

on

அமெரிக்க அதிபர் தேர்தல் விவாத சர்ச்சை, உக்ரைன் அதிபர் பெயரை மாற்றி உச்சரித்தது என பிரசாரத்தில் பின்னடவைச் சந்தித்துவரும் ஜோ பைடனின் பரப்புரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனை முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எதிர்த்துக் களமிறங்கியிருக்கிறார். தேர்தலுக்கு முன்னதாக நடந்த விவாதத்தில், பைடன் பேசிய விதம் சர்ச்சையானது. இதனால், பைடனுக்கு உடல்நிலை சரியில்லை. வயது மூப்பு காரணமாக அவருக்கு பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது என எதிர்முகாம் பிரசாரத்தை வலுப்படுத்தியது.

இதையடுத்து நாட்டோ நாடுகளின் படைகளின் ஒருங்கிணைந்த கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அறிமுகப்படுத்தும்போது, தவறுதலாக அதிபர் புடின் என பைடன் குறிப்பிட்ட சம்பவம் அடுத்தகட்ட பிரச்னையை பைடன் பிரசாரத்துக்கு ஏற்படுத்தியது.

அதிபர் பைடனுக்கு மறதி அதிகமாகிவிட்டது. இதனால்தான் அவரை ஸ்லீப்பிங் ஜோ என்றழைக்கிறோம். அவருக்கா உங்கள் ஓட்டு என ட்ரம்ப் அணி வலுவான பிரசாரங்களை முன்வைத்து வருகிறது. இப்படி சிக்கலான நிலையில், அதிபர் ஜோ பைடனுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அவர் டெல்வரில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அலுவல்களைத் தொடர்ந்து மேற்கொள்வார் என்று வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது. ஆனால், ஏற்கனவே பரப்புரையில் பின்னடவைச் சந்தித்து வரும் பைடனுக்கு இந்த கொரோனா தொற்று பிரச்னை மேலும் பின்னடவையே கொடுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்திருக்கிறார்கள்.

google news