Connect with us

latest news

டிரம்ஸ் மீது துப்பாக்கி சூடு… அதிபர் பைடன் சொன்னது என்ன…? அமெரிக்காவில் சூடு பிடிக்கும் அரசியல்…!

Published

on

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு நூலிலையில் உயிர் தப்பினார். தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் டொனால்ட் டிரம்ப் பொதுக் கூட்டத்தில் மக்களிடையே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

முன்னாள் அதிபர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி தாக்குதல் அந்நாட்டு அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது “இந்த நாட்டின் அரசியல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. இதனை குளிர்விக்கும் நேரம் வந்துவிட்டது.

அரசியல் களம் உண்மையான போர்க்களமாக, கொலைக்களமாக மாறிவிடக்கூடாது. இது சோதனை காலகட்டம். இந்த நேரத்தில் வாக்குப்பேட்டி தான் போர் பெட்டி” என தெரிவித்தார். தேர்தல் பொதுக்கூட்டத்தில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் அதே இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கி சூடு நடத்தியவரின் பெயர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விரிவான விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. அமெரிக்கா முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை மீது கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

google news