சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான பிரையன் லாராவின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். ஐம்பது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் கவுண்சிலின் அங்கீகாரத்தை பெறத் தவறிய முன்னாள் சாம்பியன் அணியான வெஸ்ட் இண்டீஸ் அணி இருபது ஓவர் உலக்கோப்பை போட்டிகளை அமெரிக்காவுடன் இணைந்து நடத்தியது.
சொந்த மண்ணில் தனது ரசிகர்களின் பலத்துடன் களமிறங்கிய இந்த அணி அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பினை இழந்து பரிதாபமாக வெளியேறியது.
இப்போது இங்கிலாந்தில் நடை பெற்று வரும் அந்த அணியுடனான டெஸ்ட் போட்டி தொடரின் பங்கேற்று வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரின் பர்மின்ஹோம் மைதானத்தில் நடந்து வருகிறது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ஜோ ரூட் ஆடி வருகிறார். நூற்றி முப்பத்தி ஓரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள லாரா பதினோறாயிரத்து தொல்லாயிரத்து ஐம்பத்தி மூன்று ரன்களை எடுத்துள்ளார். இவரின் இந்த சாதனையை ஜோ ரூட் இன்று முறியடித்துள்ளார்.
சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்துள்ள ஏழாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். ரிக்கி பாண்டிங், ஜேக் காலீஸ், இந்திய அணியின் நட்சத்திர வீரரான ராகுல் டிராவிட், இங்கிலாந்து அணியைச் சார்ந்த அலிஸ்டர் குக் ஆகியோர் முறையே முதல் ஐந்து இடத்தை பிடித்துள்ளனர்
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…