தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினாலும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகி இருப்பவர் நடிகர் விஜய். பல வருடங்களாக விஜயின் ரசிகர்கள் மன்றங்களை சேர்ந்தவர்கள் சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதன்பின் அவை விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. எனவே, அப்போது விஜய் எப்படியும் பின்னாளில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்கக்ப்பட்டது.
விஜயும் அடிக்கது தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களிடம் அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், தமிழக வெற்றிக் கழகம் என்பது தனது அரசியல் கட்சியின் பெயர் எனவும் அவர் கூறினார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி களமிறங்கும் எனவும் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், ஜுன் 22ம் தேதியான இன்று விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி பலரும் உயிரைவிட்டதால் எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் என விஜய் தரப்பில் சொல்லப்பட்டது.
இந்நிலையில், விஜய்க்கு நடிகம் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமலும், நாம் தமிழ கட்சி தலைவருமான சீமானும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். கமல் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் ‘அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
அதேபோல், சீமான் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் ‘தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி, சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் மனங்களையும் வென்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு, எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி!
காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து, மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!’ என பதிவிட்டிருக்கிறார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…