Connect with us

cinema

பாதியில் விலகிய பட இயக்குனர்…சந்தானபாரதியை வைத்து சக்சஸாக்கிய கமல்…

Published

on

கோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்”, கமல்ஹாசனுக்கு தமிழ் சினிமாவில் மறுபிறவி கொடுத்த படம் என்று கூட சொல்லலாம். படத்தின் வெற்றியை பற்றி பேசிய போது கமலே கூட தனது சினிமா வாழ்வில் முக்கியமான படம் என்று குறிப்பிட்டிருந்தார்.

“விக்ரம்” படத்தின் பெயருக்கு பின்னால் இருக்கக் கூடிய காரணம் இப்போதைய 2கே கிட்ஸ் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவே. இதே பெயரில் கமல் 1986லேயே ஒரு படத்தில் நடித்திருக்கிறார். வருங்காலம் இப்படிக் கூட அமையலாம் என்ற வழியில் படத்தின் கதைக் களம் அமைக்கப்பட்டிருக்கும்.

கதை, திரைக்கதையை சுஜாதா செய்திருந்தார். இணை இயக்குனராக கமல் பணியாற்றியிருந்தார். படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். கமலுடன் வில்லனாக சத்யராஜ், அம்ஜத் கான், டிம்பிள் கபாடியா, லிஸ்ஸி, ஜனகராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படத்தில் ‘சலாமியா’ என்ற நாடு கற்பனையாக காட்டப்பட்டிருக்கும். அந்த நாட்டிற்கான மொழி என ஒன்றும் படத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கும்.

தமிழ் சினிமாவில் கம்ப்யூட்டர் காட்டப்பட்டது முதல் முறையாக “விக்ரம்” லேயே என்று கூட சொல்லப்பட்டது. 1 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு சுமார் 8 கோடி ரூபாய் வரை வசூல் கொடுத்ததாகவும் பேசப்பட்டது. படத்தை கமலின் ‘ராஜ் கமல் இண்டர்நேஷனல்ஸ்’ தான் தயாரித்திருந்தது.

இப்போது சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கும் “அமரன் ” படத்தின் இணை தயாரிப்பையும் இந்த நிறுவனம் தான் செய்து வருகிறது.

Vikram

Vikram

“விக்ரம்” படத்தினை இயக்க இயக்குனர் ராஜசேகர் அழைக்கப்பட்டிருந்தார். இவர் கமலின் நடிப்பில் வெளியான “காக்கிச்சட்டை”, ரஜினியின் நடிப்பில் வெளியான “படிக்காதவன்” படங்களை இயக்கியிருந்தவர்.

“விக்ரம்” படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது ராஜசேகருக்கும் கமலுக்கும் இடையே சில கருத்து முறன்பாடுகள் ஏற்பட ராஜசேகர் படம் இயக்குவதிலிருந்து பாதியில் விலகி இருக்கிறார். மீதி படத்தை கமல் தனது நண்பரும் இயக்குனருமான சந்தானபாரதியை வைத்து இயக்கி முடித்து வெளியிட்டிருக்கிறார்.

படம் கலவையான விமர்சனங்களை அப்போதே பெற்றிருந்தாலும் படம் பார்த்தவர்களை பிரம்மிக்க வைத்ததாகவும் சொல்லப்பட்டது. “விக்ரம்” படத்தில் சொல்லப்படக் கூடிய மற்றொரு விஷயம் என்னவென்றால் படத்தின் கதை பத்திரிக்கை இதழ் ஒன்றில் தொடர்கதையாக வெளியாகி வந்து கொண்டிருந்தது, படம், படப்பிடிப்பில் இருக்கும் போது வெளியான நேரத்திலும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *