நியூசிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கேன் வில்லியம்சன் உடல்நிலை குறித்து மிக முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி கேன் வில்லியம்சன் உடல்நல விவகாரத்தில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கேன் வில்லியம்சன் தற்போது வலைபயிற்சியில் த்ரோடவுன்களை எதிர்கொண்டு வருகிறார். அவர் எந்த அளவுக்கு தேறி வருகிறார், அவரின் வருகை குறித்து நம்பிக்கை பிறப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரூநாள் தொடர்களின் போது கேன் வில்லியம்சன் மூட்டு அறுவைசிகிச்சையில் இருந்து குணம் அடைந்து வருவார் என்றும், உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணிக்கு அவர் திரும்புவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று அந்நாட்டு அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
“என்னென்ன செய்ய வேண்டுமோ அவை, அனைத்தையும் முறையாக செய்வோம். அதன்படி மருத்துவ அறிவுறையை கேட்டு, அவர் உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற முடியுமா, முடியாதா என்பதை பற்றி முடிவு செய்வோம். இதுபற்றி இப்போதே எதையும் கூறிவிட முடியாது.”
“ஒவ்வொரு நாள் மற்றும் வாராந்திர அடிப்படையில் முன்னேற்றம் ஏற்படும் அளவுக்கு கேன் வில்லியம்சன் அதிகளவில் உழைத்து வருகிறார். எனினும், அவரை பொருத்தவரையில் நாங்கள் மிகவும் தெளிவாகவும், அதிக கவனமாகவும் இருந்து வருகிறோம். சில சமயங்களில் அதிக எதிர்பார்ப்பும், சமயங்களில் அப்படி இல்லாத சூழல் உள்ளது.”
“நாங்கள் எதிர்பார்த்த படி அவர் உடல்நலம் தேறி வருகிறது, சில சமயங்களில் எதிர்பார்த்ததை விட அதிக முன்னேற்றம் இருந்து வருகிறது. இதுபோன்ற காயங்கள் மிகவும் கடினமாக இருக்கும், இது அனைவருக்கும் பொருந்தும். அடுத்த மூன்று வார காலங்களில் கேனை சுற்றி அதிக மருத்துவ வல்லுனர்களை கொண்டு, அவர் அணிக்கு திரும்புவது பற்றிய முடிவை எடுப்போம்,” என்று நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டெட் தெரிவித்தார்.
இந்தியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடருக்கான அணியில் நிச்சயம் தேர்வாக வேண்டும் என்ற இலக்குடன் கேன் வில்லியம்சன், கடந்த ஏப்ரல் மாதம் தனது வலதுகாலில் ஏற்பட்ட தசைநார் பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். நியூசிலாந்து அணியின் அனுபவம் மிக்க வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பௌல்ட் மற்றும் ஆல் ரவுன்டர் கைல் ஜேமிசன் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குகின்றனர்.
கேன் வில்லியம்சன் இல்லாத நியூசிலாந்து அணிக்கு டாம் லேத்தன் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார். மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட இவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…