Connect with us

india

சட்டசபையில் நிறைவேறிய தீர்மானம்!.. கேரளம் ஆகிறது கேரளா!…

Published

on

binarayee

1956ம் வருடம் மொழிவாரியாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளா உருவானது. அப்போது அந்த மாநிலம் அது கேரளம் என அழைக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலத்தில் கேரளா என அழைக்கப்பட்டது. அரசியலமைப்பின் அட்டவணையிலும் கேரளா என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், கேரளம் என மாற்ற வேண்டும் என நீண்ட வருடங்களாக அம்மாநில மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், கேரளாவை கேரளம் என மாற்ற கோரி கடந்த ஆகஸ்டு மாதம் கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில திருத்தங்களை செய்து மத்திய அரசு அனுப்பி வைத்தது. இந்நிலையில், சட்டபையில் முதல்வர் பிரனாயி விஜயன் இந்த மசோதாவை முன் மொழிந்தார்.

மேலும், அரசியலமைப்பின் அட்டவணையிலும் அனைத்து மொழிகளிலும் கேரளம் என்றே குறிப்பிட வேண்டும் எனவும் அவர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த திர்மானத்துக்கு எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தனர். எனவே, இந்த தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஷம்சீர் அறிவித்தார். அதன்பின் நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

திரும்ப பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள்… ஆனா இன்னும் இத்தனை கோடி வரவில்லையாம்… ரிசர்வ் வங்கி அதிர்ச்சி

Published

on

By

இந்திய மக்கள் ஒரே இரவில் கலங்கி நின்றது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தான். புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து 2000 நோட்டுகளை அறிமுகம் செய்து வைத்தனர்.

அந்த நோட்டில் பல வியூகங்கள் இருப்பதாகவும், சிப் இருப்பதாகவும் பலர் கிசுகிசுத்தனர். இதனை தொடர்ந்து பிங்க் கலரில் 2000 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தது. வங்கிகள் என பல இடங்களில் இருந்த 2000 நோட் சில நாட்களிலேயே காணாமல் போனது. ஒரு கட்டத்தில் மத்திய அரசே 2023ம் ஆண்டு மே19ந் தேதி 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது.

பொதுமக்கள் தங்களிடம் இருந்த 2000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிப்புகள் வந்தது. இதையடுத்து மக்களும் நோட்டுகளை தொடர்ந்து மாற்றிவந்தனர். இந்நிலையில் 97.87 சதவீத 2000 நோட்டுகள் திரும்பிவிட்டது என ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது.

இருந்தும், 7,581 கோடி 2000 நோட்டுகள் இன்னமும் திரும்பவில்லை என தெரிவித்து இருக்கிறது. அக்டோபர் 7, 2023ம் ஆண்டு வரை எல்லா கிளைகளிலும் பணத்தினை மாற்ற வசதி அமைக்கப்பட்டது. தற்போது ரிசர்வ் வங்கியின் 19 கிளைகள் மட்டுமே 2000 ரூபாயை மாற்ற முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ரிசர்வ் வங்கி பணத்தினை பெற்றுக்கொண்டு உரியவர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

Continue Reading

india

கடவுளை கேட்டுத்தான் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை செய்தாரா?!. விளாசிய ராகுல் காந்தி…

Published

on

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியை பிடித்திருக்கிறது. அதேபோல், கடந்த 2 தேர்தல்களிலும் மிகவும் குறைவான இடங்களை பிடித்த காங்கிரஸ் இப்போது அதிகமான இடங்களை பிடித்து எதிர்கட்சியாக அமர்ந்திருக்கிறது.

தனிக்கட்சியாக பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பதால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் கூட்டணியில் ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிற்து. இந்நிலையில், பாராளுமன்ற் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பேசியது அனல் பறந்தது. அவர் பேசியதாவ்வது:

என்னிடம் நிமிர்ந்து கை குலுக்கும் சபாநாயகர் மோடியிடம் தலை வணங்கி கை குலுக்குவது ஏன்?.. மணிப்பூர் பிரச்சனைக்கு காரணமே பாஜகதான். மணிப்பூரில் உள்நாட்டு கலவரம் மூளும் சூழ்நிலைக்கு பாஜக தள்ளியது. வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு மோடியும் அமித்ஷாவும் ஏன் செல்லவில்லை?’ என அவர் கேள்வி எழுப்பினார்.

அக்னி வீரர் திட்டத்தில் சேருபவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுவதில்லை. அக்னி வீரர் ஒருவர் ராணுவத்தில் உயிரிழந்தால் இழப்பீடு தரப்படுவதில்லை என சொன்ன ராகுல், பிரதமர் மோடி கடவுளுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கிறார். அவரால் நேரடியாக கடவுளுடன் பேச முடியும். பரமாத்மா நேரடியாக மோடியிடம் பேசுவார். அப்படிப்பட்ட மோடி கடவுளிடம் கேட்டுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டாரா?’ என கேட்டார் ராகுல்.

மேலும், மோடிக்கு பயந்து பாஜக தலைவர்கள் எனக்கு வணக்கம் கூட தெரிவிப்பதிலை. பாஜக தலைவர்களை கூட மோடி பயமுறுத்தி வைத்திருக்கிறார். இவ்வளவு பேசும் மோடி காந்தி இறந்துவிட்டதாக சொல்கிறார். சினிமா மூலம்தான் காந்தி மக்களிடம் அறியப்பட்டார் என அவர் சொல்வது எவ்வளவு பெரிய அறியாமை. இந்துக்கள் என தன்னை கூறிக்கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களை பரப்பும் மதம் அல்ல. ஆனால், பாஜக 24 மணி நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. உண்மையான இந்துக்கள் வெறுப்புணர்வை தூண்ட மாட்டார்கள் என ராகுல் காந்தி பேசியிருந்தார்.

Continue Reading

india

4 ஆடு தர்றேன்… முடிச்சு விட்ருங்க… கணவன் கொலையில் கைதான மனைவி!

Published

on

By

மகளின் திருமணத்துக்குத் தடையாக இருந்த கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியை தெலங்கானா போலீஸ் கைது செய்திருக்கிறது.

தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் ஜட்ஜெர்லா பகுதியைச் சேர்ந்தவர் 46 வயதான சின்னா ஆஞ்சநேயலு. இவர் அப்பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இவரது மகள் இன்ஸ்டாவில் அறிமுகமான இளைஞர் ஒருவருடன் போனில் அடிக்கடி பேசி வந்ததாகச் சொல்கிறார்கள்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த அந்த இளைஞருடன் மகள் பேசிவருவதை ஆஞ்சநேயலு கண்டித்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த இளைஞரைத்தான் திருமணம் செய்வேன் என்று மகள் கூறியிருக்கிறார். ஆஞ்சநேயலு அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார். ஆனால், மகளின் முடிவுக்கு ஆஞ்சநேயலுவின் மனைவி பாக்யலட்சுமி ஆதரவாக நிற்கவே, இருவரையும் அவர் அடித்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து அதே கிராமத்தைச் சேர்ந்த மாசியம்மா என்கிற பெண்ணைத் தொடர்புகொண்ட பாக்யலட்சுமி, தனது கணவரைக் கொண்டுவிட்டால், அதற்கு கூலியாக நான்கு ஆடுகள் தருவதாகச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து கணவர் ஆஞ்சநேயலுவை நன்றாகக் குடிக்க வைத்து ஆடுகள் கட்டும் பட்டியில் தூங்க அனுப்பியிருக்கிறார் பாக்யலட்சுமி.

ஆஞ்சநேயலு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு தனது கூட்டாளிகளான முத்யாலம்மா மற்றும் நரசிம்மன் ஆகியோருடன் அங்கு வந்த மாசியம்மா அவரின் கை, கால்களைக் கட்டியிருக்கிறார். பின்னர் கழுத்தை அறுத்து ஆஞ்சநேயலுவை கொலை செய்துவிட்டு தப்பியிருக்கிறார்கள். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்த போலீஸ், பாக்யலட்சுமியின் கால் ரெக்கார்டுகளை வைத்து அவரையும் மாசியம்மா கேங்கையும் கைது செய்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ரெண்டு கேக், 4 கிளாஸ் ஃப்ரூட் ஜூஸ் ரூ.1.22 லட்சமா?…. டேட்டிங் மோசடியால் மிரண்ட இளைஞர்!

Continue Reading

india

நீதிமன்ற உத்தரவுபடி நடந்த நீட் மறுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு… மிஸ்ஸான மாணவர்கள் இத்தனை பேரா?

Published

on

By

நீட் தேர்வில் நேர பிரச்னை காரணமாக  1563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடந்த மறுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது.

மருத்துவ கலந்தாய்வுக்கு தேசிய அளவில் தகுதி தேர்வாக நீட் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருடத்தின் நீட் ரிசல்ட் பல குழப்பங்களை கொண்டு வந்தது. ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முழு மதிப்பெண் பெற்றது. மைனஸ் மார்க்கை கொண்ட நீட் தேர்வில் ஒரு கேள்வியை விட்டால் நான்கு மதிப்பெண், தவறாக எழுதினால் ஐந்து மதிப்பெண் குறையும்.

இந்நிலையில், ரிசல்ட்டில் இரண்டாம் மதிப்பெண் 719ஆக இருந்ததாக என பல சர்ச்சைகள் எழுந்தது. இதற்கு தேசிய தேர்வுகள் முகமை, தேர்வறையில் சில மாணவர்களுக்கு நேர பிரச்னை இருந்ததால் அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் வாதிட்டது.

இதையடுத்து, கருணை மதிப்பெண் வழங்கிய மாணவர்களுக்கு அதை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்தி உடனே ரிசல்ட்டை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தவகையில், ஜூன் 23ந் தேதி நீட் கருணை மதிப்பெண் வாங்கியவர்களுக்கு மறுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் கலந்துக்கொள்ளாத மாணவர்களுக்கு அவர்களின் பழைய மதிப்பெண்ணே கணக்கில் கொள்ளப்படும் எனக் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து 1563 மாணவர்களுக்கு நடந்த தேர்வில் 813 பேர் மட்டுமே எழுதினர். இந்நிலையில், அந்த தேர்வின் ரிசல்ட் வெளியாகி இருக்கிறது. https://exams.nta.ac.in/NEET என்ற லிங்கில் ரிசல்ட் முடிவுகளை பார்க்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கவுன்சிலிங்கும் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்குள் மீண்டும் தினேஷ் கார்த்திக்… வெளியான ஆச்சரிய அறிவிப்பு..

Continue Reading

india

இந்துவா என்பதை அறிய டிஎன்ஏ சோதனை… கல்வி அமைச்சரின் களேபர பேச்சு….

Published

on

By

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிசம்பர் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்றார். கல்வி அமைச்சராக மதன் திலாவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஜூன் 21ந் தேதி மதன் திலாவர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கல்வி அமைச்சரான மதன் திலாவர் பேசும்போது, ஒருவர் இந்துவா இல்லையா என்பதை அவர்களின் டிஎன்ஏ வைத்து கணிக்க வேண்டும். அப்படி அவர்கள் இந்து இல்லாமல் இருந்தால் அவர்கள் தந்தை யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் எனப் பேசி இருந்தார். கல்வி அமைச்சரின் இந்த பேச்சு பெரிய அளவில் சர்ச்சையானது.

மதன் திலாவரின் இந்த பேச்சால் ராஜஸ்தானில் பிரச்னை மூண்டு இருக்கிறது. சனிக்கிழமை ஆதிவாசி கட்சியினர் போராட்டம் நடத்தினர். பாரத ஆதிவாசி கட்சி தலைவர் ராஜ்குமார் கோட் மற்றும் அவர் ஆதரவாளர்கள் மதன் திலாவர் வீடு வரை ஊர்வலமாக சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், மதன் திலாவர் பெரிய தவறு செய்துவிட்டார்.

அவர் மன்னிப்பு கேட்டு உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது. ராஜஸ்தான் மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளனர். அரசியலமைப்பு சட்டம் மத சுதந்திரத்தினை கொடுத்து இருக்கிறது. எங்கள் மாதிரிகளை மதன் திலாவருக்கு தபால் மூலம் அனுப்புவோம் எனவும் குறிப்பிட்டார். இதை தொடர்ந்து பேசிய மதன் திலாவர், ஆதிவாசிகள் எங்கள் சமூகத்தின் ஒரு பகுதி. அவர்கள் இந்துக்கள் தான் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Continue Reading

Trending

Exit mobile version