தமிழக – கேரள எல்லையான களியக்காவிளையில் காரில் கழுத்தறுப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபரின் கொலை வழக்கு கேரள போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குவாரி உரிமையாளர் தீபு சோமன். இவர் ஜேசிபி வாகனம் வாங்குவதற்காகக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து 10 லட்ச ரூபாயுடன் தமிழ்நாடு கிளம்பி வந்திருக்கிறார். ஆனால், தமிழக எல்லையான களியக்காவிளை அருகே காரில் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து கொலை வழக்குப் பதிந்த கேரள போலீஸார், அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த வழக்கில் தீபு சோமனின் நண்பர் என்று சொல்லப்படும் அம்பிலி என்கிற சஜிகுமாரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கைதான அம்பிலி, தீபு சோமனின் திட்டப்படியே அவரைத் தான் கொலை செய்ததாகவும் அவரின் அறிவுறுத்தலின்படியே அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பிளேடு, கையுறை உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தியதாகவும் போலீஸில் கூறியிருக்கிறார். மேலும், தீபுவின் அறிவுறுத்தலின்படியே, காரில் இருந்து இறங்கி நொண்டி நொண்டி நடந்ததாகவும் கொலைக்குப் பின் தனது ஆடைகளை வீட்டருகே வைத்து எரித்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
ஆனால், அம்பிலியின் வாக்குமூலத்தை நம்பாத போலீஸார் பணத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கிலேயே தீபுவுடன் நட்பு பாராட்டியிருக்கலாம் என்று கருதுகிறார்கள். மேலும், தீபுவிடம் இருந்து எடுக்கப்பட்ட 10 லட்ச ரூபாயில் அம்பிலியின் வீட்டில் இருந்து ரூ.7.5 லட்சத்தையும் போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அத்தோடு, அம்பிலிக்கு அறுவைச் சிகிச்சை பிளேடு, மயக்க மருந்து உள்ளிட்டவைகளைக் கொடுத்து உதவிய சுனில் குமார் என்பவரையும் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…