வயநாடு நிலச்சரிவில் சிக்கி நூற்றி எழுபதுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் இந்தியாவையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கேரளாவில் முகாமிட்டு மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்ணில் புதைந்த நிலையில் உள்ள சடலங்களை மீட்கும் பணி தொடர்ச்சியாக நடந்து வர, பலியானவர்களை அடையாளம் கண்டு பிரேத உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்தும் வருகிறது. முகம் சிதைந்த நிலையில் இருக்கும் உடல்களை அடையாள காணுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த துயரத்திற்கு பலியான பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் மூலம் உடல் அடையாளம் கண்டுபிடிக்கும் பணியும் தொடர்கிறது. இந்நிலையில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக கோரிக்கையை வைத்துள்ளார்.
“சோக காலங்களில், அனைவரும் கை கோர்ப்பது ஒற்றுமையின் தூய்மையான வடிவம், யாரும் துன்பங்களைத் தனியாக எதிர்கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு பங்களிப்பும் முக்கியமானது, அதன் அளவு வித்தியாசப்பட்டாலும் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும்” என சொல்லி, உதவிக்கரம் நீட்ட முன் வருவோர் பரிவர்த்தனை நடத்த வேண்டிய வங்கி விவரங்களை வெளியிட்டுள்ளார்.
அதன் படி கணக்கு எண் – 67319948232, பெயர் – முதல்வரின் பேரிடர் நிவாரண நிதி (Chief Minister’s Distress Relief Fund), வங்கி – பாரத ஸ்டேட் வங்கி, கிளை – City Branch, Thiruvananthapuram
IFSC – SBIN0070028 என விவரங்களை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான சூர்யா -ஜோதிகா தம்பதி, சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தி ஆகியோர் கூட்டாக இணைந்து நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐம்பது லட்ச ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியிருக்கின்றனர். நடிகர் விக்ரமும் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…