Cricket
சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது ஐபிஎல் கிரிக்கெட் அணி நிர்வாககங்கள்.
ஐபிஎல் ஆரம்பித்து விட்டாலே இந்த நாட்கள் முழுவதும் திருவிழா இந்திய கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்த வரை என்றே தான் சொல்லியாக வேண்டும். தங்களுக்கு பிடித்த அணியும், விருப்ப வீரர்களின் விளையாட்டினை பார்க்க அதிக ஆர்வம் காட்டி மைதானத்திற்கு அணி திரண்டு வந்து விடுவார்கள்.
முதல் போட்டி துவங்கியதிலிருந்தே பரபரப்பும், சுவாரஸ்யமும் பற்றிக் கொள்ளும். உலக அளவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டி தொடர்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ள ஒன்றாகப் பார்க்கப்படுவது ஐபிஎல் தொடரும் தான்.
ஐபிஎல் சீசன் ஆரம்பித்து விட்டாலே பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. அடுத்த ஆண்டு 2025 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் கோல்கத்தா அணி நிர்வாகம் எடுத்துள்ள முடிவு கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சீசனில் வெற்றி வாகை சூடிய கோல்கத்தா அணியை வழி நடத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அணி தங்களது பழைய வீரர்கள் தலா 6 பேரை ஒவ்வொரு சீசனிலும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது ஐபிஎல் போட்டிகளின் விதிகளில் ஒன்று.
இதன்படி கோல்கத்தா அணி சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷத் ராணா, ரமண்தீப் சிங், ரிங்கு சிங் , அதிரடி ஆல்-ரவுண்டர் ஆந்திரே ரஸ்சல் ஆகிய 6 பேரை தக்க வைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது அந்த அணியின் நிர்வாகம். கோல்கத்தா அணி நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.