எத்தனையோ வழக்குகளை நீதிமன்றங்கள் பார்த்திருக்கும். அதிலும் கணவன் மனைவிக்குள் மனம் ஒப்புக் கொள்ளாமல் விவாகரத்து கேட்டு படியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பல காரணங்கள் இருக்கிறது.
ஆனால் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகும் ஒரு விவகாரத்து வழக்கு குறித்து கேட்கும்போது பலருக்கு ஆச்சரியத்தினை விட அதிர்ச்சியே மேலோங்கி இருக்கிறது. ஒரு தம்பதி தங்களுடைய திருமணம் முடிந்து மூன்று நிமிடத்தில் விவகாரத்து செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தான் அது.
2019ம் ஆண்டு குவைத்தை சேர்ந்த ஒரு தம்பதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். நண்பர்கள் புடை சூழ திருமணம் முடிந்து இருவரும் வீட்டிற்கு கிளம்பிய நிலையில் மணப்பெண் தவறுதலாக படிகளில் இடறி விழுந்துள்ளார். ஆனால் அவருக்கு கை கொடுத்து தூக்காத மணமகன் எல்லோருக்கும் முன் முட்டாள் பார்த்து நடக்க மாட்டியா என கேட்டிருக்கிறார்.
இதைக் கேட்டு மணமகள் பெரிய அளவில் அதிர்ச்சியாகி விடுகிறார். இப்போதே இப்படி பேசுபவர் பின்னால் என்னென்ன பேசுவார் என பயந்தார். உடனே நீதிமன்றத்தை நாடி தனக்கு விவாகரத்து வேண்டும் என கேட்டு இருக்கிறார். இதையடுத்து, நீதிபதிகளும் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உடனே அவருக்கு விவாகரத்து வழங்கியும் உத்தரவிட்டனர்.
இதை எடுத்து இவர்களின் திருமண உறவு மூன்று நிமிடங்களில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல, 2004ம் ஆண்டு பிரிட்டனில் நடந்த திருமணம் 90 நிமிடங்கள் மட்டுமே நிலைத்தது. பின்னர் தம்பதிகளும் விவாகரத்து பெற்றனர். அவர்களை தாண்டி மிகக்குறைந்த ஆயுள் கொண்ட திருமண உறவு இதுதான் என சமூகவலைதளத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…