Categories: latest newstamilnadu

நீதிபதியாக அல்ல, ஒரு சகோதரியாக சொல்கிறேன்… வேறு இடத்தை கூறுங்கள்… நீதிபதி வேண்டுகோள்…!

ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேறு இடத்தை கூறுங்கள் என்று நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்து இருக்கின்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அவரை எட்டு பேர் கொண்ட மர்மக்குழு அரிவாளால் வெட்டி படுகொலை செய்திருந்தனர். இதை தொடர்ந்து ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்போது அவரின் உடல் பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் உடலை பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலகத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரி ஆம்ஸ்ட்ராங்  மனைவி சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்திருந்தார். இந்த மனு தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் எதுவும் பதில் கொடுக்காத காரணத்தினால் இந்த கோரிக்கை தொடர்பாக அவசர விசாரணை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி இடம் முறையிடப்பட்டது.

இந்த வழக்கை தனி நீதிபதி பவானி சுப்பராயன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் நெரிசல் மிகுந்த பகுதி என கூறி வரைபடங்களை அரசு சமர்ப்பித்தது. ஆனால் மனுதாரர் தரப்பில் வக்கீல் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி வழங்கியதாக வாதம் இடப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வக்கீல் தெரிவித்திருந்ததாவது தேமுதிக அலுவலகம் 27 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருக்கும் இடம் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இடம். இதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் 2000 சதுர அடியில் மாநகராட்சி ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு நீங்கள் அடக்கம் செய்யலாம் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையின் போது மயானம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இடத்தில் தான் உடலை அடக்கம் செய்ய முடியும். ஆம்ஸ்ட்ராங் உயிரிழப்பு பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு பின்னர் வேறு இடத்தில் மணி மண்டபம் கட்டிக் கொள்ளலாம். நாளை வீரவணக்கம் போன்ற நிகழ்ச்சியின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது?

ஏற்கனவே ஹஜ்ராஜ் சம்பவத்தை பார்த்தீர்களா? வேறு பெரிய சாலை விசாலமான இடம் இருந்தால் கூறுங்கள். நான் உத்தரவு பிறப்பிக்கிறேன். இதனை ஒரு நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன். ஆம்ஸ்ட்ராங் உடலை வேறு இடத்தில் அடக்கம் செய்யுங்கள். பேசிவிட்டு வாருங்கள், நான் இங்கேயே இருக்கின்றேன். என்று கூறி வழக்கை 10:30 மணிக்கு விசாரிக்கிறேன் என்று கூறி ஒத்தி வைத்தார்.

Ramya Sri

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago