Connect with us

latest news

பட்ஜெட் தான் ப்ராப்ளம்…காமன்வெல்த் கேம்ஸ் கொடுத்துள்ள அதிர்ச்சி?…

Published

on

CommonWealth

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 1930ம் ஆண்டு முதல் 1950ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் எம்பயர் கேம்ஸாக நடத்தப்பட்டு வந்தது. 1978ம் ஆண்டு முதல் விளையாட்டிற்கான தலைப்பிலிருந்து பிரிட்டிஷ் என்ற வார்த்தையை நீக்கப்பட்டது.

வில்வித்தை, தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து, கடற்கரை கைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், சைக்கிள் பந்தயம், டைவிங், ஜிமினாஸ்டிக்ஸ்,ஹாக்கி, ஜூடோ, புல்வெளி கிண்ணங்கள், வலைப்பந்து, படகுப் போட்டி, ரக்பி லெவென்ஸ், ஸ்குவாஷ், நீச்சல், படப்பிடிப்பு, நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், டிரையத்லான், பளு தூக்கல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகள் இந்த காமன்வெல்த் போட்டிகளில் அடக்கம்.

வருகிற 2026ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற் இருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் முக்கிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளது.

CommonWealth Games

CommonWealth Games

இது விளையாட்டு ரசிகர்களை ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பட்ஜெட்டின் காரணமாக இந்த விளையாட்டுகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 2ம் தேதி வரை காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், பத்து விளையாட்டுகள் தவிர முக்கிய விளையாட்டுகள் பல போட்டி தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, மல்யுத்தம், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், பேட்மிட்டன் ஆகிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டுகள் நீக்கப்பட்டது யாருக்கு அதிர்ச்சியை தருகிறதோ இல்லையோ, இந்திய ரசிகர்களை அதிக சோக்த்தில் ஆழ்த்தியுள்ளது. காராணம் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா ஆதீக்கம் செலுத்தி வந்த விளையாட்டுகள் இதில் அடக்கம், பதக்கப் பட்டியலில் இந்தியா முன்னிலை பெற இந்த விளையாட்டுகளே உதவி வந்திருந்தன் இதற்கு முன்னர் நடந்த முடிந்த காமன்வெல்த் போட்டிகளில்.

 

google news