latest news
பூசணிக்காயால் கிடைத்த புது வாழ்வு…விவசாயி வாழ்வில் நடந்த தரமான சம்பவம்…
அதிர்ஷ்டம் ஒருவரை நெருங்க வேண்டும் என நினைத்து விட்டால், அதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதே நேரத்தில் கெட்ட நேரம் விரட்ட நினைத்தாலும் எளிதில் அதிலிருந்து விடுபடவும் முடியாது. எவருக்கு எந்த நேரத்தில் எது நடக்கும் என்பது தெரியாது, புவி போடும் புதிரை சமாளித்துது தான் வாழ்ந்து காட்டி வருப்படுகிறது. கடுமையாக உழைத்து கை நிறைய காசு சம்பாதித்து விடலாம் என முழு மூச்சாக நினைத்து, அயராத உழைப்பை அன்றாடம் காட்டி வந்தாலும் அதிர்ஷ்டமும் கொஞ்சம் இருந்தாக வேண்டியதிருக்கிறது சில நேரங்களில்.
என்ன தான் உற்சாகமாக உழைத்தாலும் அதற்கான உரிய பலன் கிடைக்காவிட்டால், சோர்வும், சலிப்பும் தாமாகவே வந்து ஒட்டிக்கொள்ளும் பல நேரங்களில். இது போன்ற நேரங்களில் தான் அதிர்ஷ்டத்தினை நம்பியாக வேண்டியிருக்கிறது. அது மட்டும் துணை நின்றால் போது எந்த காரியமும் எளிதல் இலக்கை அடைந்து வெற்றியையும், வசூலையும் வாரிக்குவித்து விடும் என்ற நம்பிக்கையில் ஓடிக்கொண்டும் இருக்கிறது ஒரு சாராரின் வாழ்க்கை சக்கரம்.
எந்த வேலை முழுமையாக செய்யாமல் வரவு என்பது எட்டாக் கனியென நினைப்பவர்களின் நிலையை கூட ஒரே நொடியில் மாற்றி அமைத்து விடுகிறது அதிர்ஷ்டம். அதனால் அதன் மீது இத்தனை எதிர்பார்ப்பும், ஆவலும்.
விவசாயத்தை மட்டுமே நம்பி தனது வாழ்க்கையை ஓட்டி வந்து ஒருவரின் பக்கம் அடித்துள்ளது அதிர்ஷ்டக் காற்று.
பூசணிக்காயை மட்டுமே விளைய வைத்து அதனைக் கொண்டே தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வாழ்ந்து வந்து கொண்டிருந்திருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த விவசாயி. தேவை போக மீதமுள்ள பணத்தில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் அந்த விவசாயி.
என்றாவது ஒரு நாள் அதிர்ஷ்டம் நம்மை சுற்றி வட்டமிடாதா?, நம் வாழ்வின் வசந்த வாசலின் கதவு திறக்காதா என லாட்டரி டிக்கெட்டுகளை தொடர்ந்து வாங்கி வந்து கொண்டிருக்கிறார் அவர்.
அவரின் நம்பிக்கை வீணாக போகவில்லை என்பதை தெரிவிக்கும் விதமாக அவர் பக்கம் சுழன்று, சுழன்று அடித்திருக்கிறது அதிர்ஷ்டக் காற்று. அவர் வாங்கிய லாட்டரி பரிசுக்கு தேர்வாகியிருக்கிறது என்பதனை நினைத்து மகிழ்ந்திருக்கிறார்.
இவருக்கு அடித்த அதிர்ஷ்டம் யாருக்கு அடித்திருந்தாலும் வாழும் நாட்களில் சொர்கத்தில் மிதக்கலாம் என்பதை சொல்லியிருக்கிறது லாட்டரியின் மூலம் அவருக்கு அடித்திருந்த பம்பர் பரிசுத் தொகை. இந்திய ரூபாயின் மதிப்பு படி சுமார் ஒரு கோடியே இருபத்தி ஐந்து லட்சம் பரிசாக கிடைத்திருக்கிறது.
மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்த அந்த அமெரிக்க நாட்டு விவசாயி பூசணிக்காய் தந்த வருமானத்தில் தான் லாட்டரி வாங்கப்பட்டது, அதனால் இந்த நிலைக்கு தன்னை அழைத்துச் சென்ற பூசணிக்காய்களுக்கு நன்றி தெரிவித்திருந்த சுவாரசியமான சம்பவத்தைப் பற்றி கேள்விப் பட்டவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.