latest news
மதுரையை மிரட்டிய பேய் மழை!…எத்தனை வருஷத்துக்கு பிறகு இது நடக்குது தெரியுமா?…
தென் – மேற்கு பருவ மழையினால் தமிழகத்தின் சில மாவட்டங்கள் அதிக மழை பொழிவை சந்தித்திருந்தது. சராசரி அளவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த ஆண்டு தென் – மேற்கு பருவ மழையின் சராசரியை விட அதிகமே என புள்ளி விவரங்கள் சொல்லியிருந்தது.
தமிழகத்தில் தற்போது வட – கிழக்கு பருவ மழை துவங்கி ஒரு சில இடங்களில் வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
வட – கிழக்கு, தென் – மேற்கு பருவ மழை எப்படிப் பெய்தாலும் இதனால் பெரிய பாதிப்பினை சந்திக்காத ஊர்களில் ஒன்றாக இருந்து வந்தது மதுரை.
மதுரையைப் பொறுத்த வரை வெப்ப சலனத்தினால் வரும் மழையை மட்டுமே அதிகமாக சந்தித்து வருகிறது.
இங்கு பருவ மழை என்பது அதிகமாக கிடையாது என சில தரவுகள் சொல்லியிருந்தன. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மட்டுமே மதுரையில் மழை பதிவாகும். பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரத்தில் மழையு, என காணப்படுவது அதன் சிறப்புகளில் ஒன்று என சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இந்தாண்டு மதுரையை பொறுத்த வரை வரலாற்றில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறதாக புள்ளி விவரங்கள் சொல்லி வருகிறது.
இன்னும் சரியாக சொல்லப்போனால் 70 ஆண்டுகளுக்கு முன்னர் தான் இப்படிப் பட்ட பேய் மழையை பார்த்திருக்கிறதாம் மதுரை. புள்ளி விவரங்களின் படி பார்க்கும் போது 10வது மாதம் 1955ம் ஆண்டு 17ம் தேதியன்று மட்டும் பெய்த மழையின் அளவு 115 மில்லி மீட்டராம்.
அதன் பின்னர் 70 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அக்டோப்ர் மாதத்தில் இதே போன்ற மழைப் பொழிவு இருந்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி 2024ம் ஆண்டு, 10வது மாதமான இம்மாதம் 13ம் தேதியன்று பெய்த மழையின் அளவு எவ்வளவு தெரியுமா?, அன்று ஓரே நாளில் மட்டும் 110 மில்லி மீட்டர் மழை பெய்திருகப்பதாக புள்ளி விவரங்கள் சொல்லியிருக்கிறது. மதுரை ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் ஒரே நாளில் மட்டும் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறதாம்.