நீட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் பொதுத்தேர்வுகளில் முறைகேடு செய்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது.
மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கியது, வினாத்தாள் வெளியான விவகாரம் என பல்வேறு மோசடிகள் அம்பலமானது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கிய நிலையில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றமும் குட்டு வைத்தது.
அதேபோல், சமீபத்தில் முடிந்த நெட் தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. மேலும், நெட் தேர்வு வேறொரு தேதியில் நடைபெறும், அதற்கான அறிவிப்பும் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், பொதுத்தேர்வுகள நேர்மையாக நடத்தும் பொருட்டு, இந்தத் தேர்வுகளில் முறைகேடு செய்வதைத் தடுக்க புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பொதுத்தேர்வுகளின் நேர்மையற்ற வழிமுறைகளைத் தடுத்தல் சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதன்படி, பொது மற்றும் நுழைவுத் தேர்வுகளில் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இந்த சட்டம் தற்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது.
இதையும் படிங்க: கள்ளச்சாரய பலி… அதிரடி ஆபரேஷன் – 876 பேரை வளைத்த போலீஸ்
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…