நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிலும் வட மாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் கோவிலுக்கு அருகே பந்தல் அமைத்து துர்கா அம்மன் சிலையை நிறுவி பலரும் சிறப்பு பூஜை நடத்தி வழிபாடு செய்தார்கள். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
அந்த வகையில் பெங்களூரு நகரில் உள்ள பகுதியிலும் நவராத்திரியை ஒட்டி கோவிலுக்கு அருகே துர்க்கை அம்மன் சிலை நிறுவி பந்தல் போடப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். அப்போது சாமி தரிசனத்தில் கலந்து கொண்ட ஊழியர் ஒருவர் கையில் லேப்டாப்பை திறந்தபடியும் மறுக்கையில் செல்போனை வைத்துக்கொண்டு வேலை பார்த்தபடியும் பூஜையில் கலந்து கொண்டிருந்தார்.
இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி இருந்தது. அதில் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? நாடி நரம்பெல்லாம் ஐடி ரத்தம் ஊறிய ஊழியர் இவர்? என்று அவரை பலரும் கிண்டல் செய்து வந்தார்கள். இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வந்த நிலையில் பலரும் இதற்கு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…