குழந்தைகளுக்கு ஆசையாய் வாங்கிய பிஸ்கட்டில் இரும்பு கம்பி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய சூழலில் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் கலப்படம் இருக்கின்றது. சமீப நாட்களாக கடைகளில் இருந்து வாங்கும் பொருள்களில் பூச்சிகள், பூரான் உள்ளிட்ட பொருள்கள் இருப்பது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனிதனின் கட்டைவிரல் இருந்தது. அதைத் தொடர்ந்து தயிர் பாக்கெட்டில் பூரான் இருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தரமான பொருட்களை தயாரித்துக் கொடுக்கும்படி வேண்டுகோள் கொடுத்து வந்தார்கள்.
அதாவது நாம் சாப்பிடும் பொருட்களை இப்படி தரம் மற்ற முறையில் தயாரித்து வந்தால் அதை சாப்பிடும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் வாய்படுவார்கள் என்பதை யோசிக்காமல் நிறுவனங்கள் இப்படி தரமற்ற முறையில் உணவுகளை தயாரிப்பது நியாயமற்றது என்று கூறி வந்தார்கள். இந்நிலையில் மற்றொரு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
அதாவது தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் வசிக்கும் அனுமன் ரெட்டி என்ற நபர் தனது குழந்தைகளுக்காக போர்பன் பிஸ்கட் ஒன்றை வாங்கி வந்திருக்கின்றார். அந்த பிஸ்கட்டை பிரித்து அதிலிருந்து பிஸ்கட் ஒன்றை எடுத்து சாப்பிடும் போது மெல்லிய கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதன் ஆபத்தை உணர்ந்து வருத்தமடைந்த அனுமன் ரெட்டி பிஸ்கட்டில் இரும்பு கம்பி இருப்பதை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டில் இது போன்ற பொருட்கள் இருப்பது மிகவும் ஆபத்தானது என்று கூறி வருகிறார்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…