மயங்கி கிடந்த பாம்புக்கு வாயோடு வாய் வைத்து இளைஞர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்கு ஏதாவது ஆனாலே கண்டுகொள்ளாமல் சென்று கொண்டிருக்கும் சூழலில் ஒரு உயிரினத்திற்கு ஒரு இளைஞன் உதவி செய்திருக்கின்றார். அது நாய், பூனை என்று மற்ற விலங்குகளுக்கு உதவி இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் நிறைய விஷத்தன்மை நிறைந்த அந்த உயிரினத்தை பார்த்தாலே பலரும் நடுங்கக் கூடிய பாம்புக்கு ஒரு இளைஞர் உதவி செய்திருக்கின்றார்.
குஜராத் மாநிலத்தில் இறந்து போன பாம்புக்கு தான் ஒரு இளைஞர் மூச்சு கொடுத்து காப்பாற்றி இருக்கின்றார். குஜராத் மாநிலம் வதோர மாவட்டத்தில் வனவிலங்குகளை காப்பாற்றும் சேவையை யாஷ் தத்வி என்ற இளைஞர் செய்து வருகின்றார். இவர் வனவிலங்குகளுக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றார்.
இந்நிலையில் ஒரு அடி நீளம் உள்ள ஒரு பாம்பு இறந்து கிடப்பதாக யாஷ் தத்விக்கு ஒரு போன் கால் வந்திருக்கின்றது. இதைக்கேட்ட உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர் அந்த இடத்தில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருந்த விஷப்பாம்புவை பார்த்திருக்கின்றார். உடனே அந்த பாம்புவின் வாயில் வாய் வைத்து அந்த இளைஞனுக்கு மூச்சுக்காற்று கொடுத்தார்.
முதல் இரண்டு முறை மூச்சுக்காற்று கொடுத்த போது அந்த பாம்பு அசைவில்லாமல் இருந்தது. மூன்றாவது முறை மூச்சுக்காற்று கொடுத்த உடன் உயிர் பிழைத்துக் கொண்டது. உயிர் பிழைத்த பாம்பு பின்னர் வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. பாம்புவுக்கு மூச்சுக்காற்று கொடுத்து தத்வி காப்பாற்றிய வீடியோவானது இணையதள பக்கங்களில் படு வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…