தலைமை செயலத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 22.5 லட்சம் மோசடி செய்த நபரை ஆவடி காவல்துறை கைது செய்து இருக்கிறது.
2018ம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் வசித்து வந்த 52 வயதாகும் ராஜ்பாபு, சென்னை தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக முத்தரசன் என்பவரிடம் கூறி அவர் ஆசையை தூண்டி இருக்கிறார். இதை நம்பிய முத்தரசன் தனக்கு வேலை வாங்கி தரக்கூடிய அவரிடம் 2.5 லட்ச ரூபாயை கொடுத்திருக்கிறார்..
அதுமட்டுமல்லாமல் தனக்கு தெரிந்த சிலருக்கும் வேலை வாங்கி தர வேண்டும் என அவரிடம் சென்று பேச அவர்களுக்கும் வேலை வாங்கி தருவதாக ராஜ் பாபு நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதை அடுத்து அவர்கள் ஒன்பது பேரும் சேர்ந்து தலா 2.5 லட்ச ரூபாய் என மொத்தமாக 22.5 லட்சத்தினை ராஜ்பாபுவுக்கு கொடுத்துள்ளனர்.
ஆனால் நாட்கள் கடந்து மாதங்கள் கடந்து வருடங்கள் ஆகியும் ராஜ் பாபு காரணத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக அனைவரும் உணர ராஜ் பாபுவை தொல்லை செய்து இருக்கின்றனர். இதனால் அவர்களிடம் 11 லட்சம் ரூபாயை மட்டுமே கொடுத்திருக்கிறார்.
இதில் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் உடனே ஆவடி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தெரியாதவர்களிடம் வேலை கிடைப்பதற்கு முன்னால் பெரிய அளவில் தொகை கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…