Connect with us

Featured

வாக்கிங்ல வோர்ல்டு ரெக்கார்டு…வாவ்…வாட் எ மேன்!…

Published

on

Walking

மனிதனால் தன்னை புத்துணரவாக வைத்து கொள்ள பல்வேறு விதமான அணுகுமுறைகளை கடைபிடிக்கப் பட்டு  வரப்படுகிறது. உணவுப் பழக்க வழக்கத்தின் மூலம் பலரும், உடற் பயிற்சியின் வாயிலாகவும், தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து  மன அழுத்தத்தை குறைய வைப்பதில் அதிக கவனத்தை செலுத்தி வருவர்கள் என பலரின் குணாதிசயங்களை கண்டு வருகிறது இந்த உலகம்.

செல்லப் பிராணிகளை வீட்டில் வளர்ப்பது, அவைகளை தன் போன்ற ஒரு உயிராக மதித்து சமமாக நடத்தி, சொல்லப்போனால் தன்னை பாதுகாப்பதை விட அதிகமாகவும் கண்காணித்து வருபவர்களும் அதிகம். குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக நினைத்து சக மனிதர்களை அழைப்பது போலவே அழைத்து , அவர்களின் மீது காட்டும் அன்பு, பாசம் கூடவே மரியாதையையும் செல்லப் பிராணிக்கு வழங்கப்படுகிறது.

உடற்பயிற்சி உடலுக்கு வலு சேர்க்க செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடைப் பயிற்சியும் செய்யப்படுகிறது. அதில் சிலர் தங்களது வளர்ப்பு செல்லப் பிராணிகளை நடைபயிற்சியின் போது அழைத்து செல்வதையும், அவைகளையும் தங்களோடு நடக்க வைப்பதையும் பழக்கமாகக் கொண்டு நிறைய பேர் இருந்து வருகிறார்கள்.

இந்த விஷயத்தில் கனடா நாட்டைச் சேர்ந்து ஒருவர் செல்லப்பிராணிகளை அழைத்துக் கொண்டு வாக்கிங் செல்வதில் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

Walking with Dog

Walking with Dog

மிட்செல் ரூடி என்பவர் ஆதரவற்ற நாய்களை தத்தெடுத்து, அவைகளை நல்ல முறையில் பராமரிப்பதை குறிப்ப தன் மீதான கவனத்தை ஈர்க்கும் விதமாக அவர் இந்த சாதனை முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

ஒரே நேரத்தில் 38 நாய்களை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு தன்னுடன் வாக்கிங் அழைத்க்துச் சென்று இந்த சாதனையை செய்திருக்கிறார் மிட்செல் ரூடி.இவரின் இந்த  சாதனை பற்றிய செய்தி வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *