latest news
ரயில் பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்… இன்று முதல் கன்னியாகுமரி வரை எக்ஸ்பிரஸ் ரயில் நீட்டிப்பு…
மங்களூர் சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு இடையே இயக்கப்பட்ட வந்த பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் தற்காலிகமாக கன்னியாகுமாரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கின்றது.
மங்களூர் சென்ட்ரல் நாகர்கோயில் இடையே இயக்கப்பட்டு வந்த பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் காரணமாக ஜூலை மூன்றாம் தேதி முதல் கன்னியாகுமரி வரை நீடிக்கப்பட்டிருக்கின்றது. பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலானது நாகர்கோயில் மங்களூர் இடையே இயக்கப்பட்டு வருகின்றது. அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரயிலானது இரவு 9.10 மணிக்கு மங்களூரை சென்றடையும் .
பின்னர் அதிகாலை 5.05 மணிக்கு மங்களூரிலிருந்து புறப்பட்டு இரவு 8:55 மணிக்கு நாகர்கோவில் வந்ததடையும். இப்படி திருவனந்தபுரம் மங்களூருக்கு இடையே இயக்கப்பட்டு வந்த இந்த ரயிலானது பின்னர் நாகர்கோயில் வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது 21 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில் பயணிகளின் கூட்ட நெரிசல் காரணமாக பெட்டிகளின் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் அதிகரிக்க முடிவு செய்தது.
ஆனால் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 21 பெட்டிகளுக்கு மேல் இருக்கும் ரயில்களை நிறுத்த முடியாது என்ற காரணத்தினால் ஜூலை மாதம் முதல் கன்னியாகுமரி வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஏனெனில் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் தான் 24 பெட்டிகளை கொண்ட ரயில்களை நிறுத்தும் வசதி இருக்கின்றது. இதனால் திட்டமிட்டபடி இன்று முதல் நாகர்கோயில் மங்களூருக்கு இடையே இயக்கப்பட்டு வந்த பரசுராம் எக்ஸ்பிரஸ் ஆனது தற்போது கன்னியாகுமரி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருந்ததாவது பயணிகளின் கூட்ட நெரிசலையை தவிர்ப்பதற்காக ரயில்வே பெட்டிகளை அதிகமாக இணைத்துள்ளோம். இதனால் வண்டியின் 16649 மங்களூர் சென்ட்ரல் கன்னியாகுமரி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை மூன்றாம் தேதியில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும். அதைத் தொடர்ந்து 16650 கன்னியாகுமரி மங்களூர் சென்ட்ரல் பரசுராம் எக்ஸ்பிரஸ் ஜூலை நான்காம் தேதியில் இருந்து கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.