பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டி 2024ல் இந்திய அணிக்கு டேபிள் டென்னிஸுக்காக புதிய சாதனையை மணிகா பத்ரா நிகழ்த்தி இருக்கிறார். இதனால் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா அணி முதல் இரண்டு பதக்கத்தை வென்று இருக்கிறது. இந்தியாவில் இருந்து முதல் பெண் வீராங்கனையான மனு பாக்கர் ஒரே ஒலிம்பிக் செல் இரண்டு பதக்கத்தை வென்று சாதனை புரிந்திருக்கிறார்.
இந்நிலையில் இந்திய அணி தற்போது டேபிள் டென்னிஸில் புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த மணிகா பத்ரா தன்னைவிட தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் பிரெஞ்சு வீராங்கனை பிரித்திகா பவடேவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். மணிகா பத்ரா 11-9, 11-6, 11-9, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். பிரித்திகா பவ்டே பாண்டிச்சேரியை பூர்வீகமாக கொண்ட வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் இதுவரை எந்த வீரர்களும் டேபிள் டென்னிஸில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியதில்லை. டோக்கியோ 2020ம் ஆண்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அச்சந்தா சரத் இரண்டாவது சுற்று வரை முன்னேறி இருந்தார். அதே ஒலிம்பிக்கில் மணிகா இரண்டாவது சுற்று வரை மட்டுமே சென்றார். இது இந்தியாவிற்கு புதிய மகுடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…