கோவை – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரை மறித்து முகமூடிக் கொள்ளையர்கள் பணத்தைப் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
எர்ணாகுளம் வலுவண்ணம் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம் சித்திக் என்பவர், சொந்த வேலையாக சேலத்துக்குத் தனது காரில் வந்திருக்கிறார். பின்னர், சேலத்தில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மதுக்கரை அருகே அவரது காரை முந்திய இன்னோவா கார் ஒன்று உரசியபடி நின்றிருக்கிறது.
அதிலிருந்து முகமூடி அணிந்தபடி இறங்கிய ஆறு பேர் கொண்ட கும்பல் அஸ்லாமின் காரைத் தாக்கியதோடு, பணத்தைப் பறிக்கவும் முயற்சித்திருக்கிறது. ஆனால், அதிர்ஷவசமாக காரை ஓட்டி தப்பிய அஸ்லாம், மதுக்கரை காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
அஸ்லாமின் காரில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணையைத் தொடங்கிய போலீஸார் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சிவதாஸ், ரமேஷ் பாபு, விஷ்ணு மற்றும் அஜய்குமார் ஆகியோரைக் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், வேறொரு காரை மறித்து வழிப்பறி செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் தவறுதலாக அஸ்லாமின் காரை மறித்ததாக போலீஸாரிடம் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரையும் போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…