தாய் இறந்தது கூட தெரியாமல் அவர் அருகில் நான்கு நாட்கள் உட்கார்ந்திருந்த மன வளர்ச்சி குன்றிய மகன் குறித்த தகவல் கேட்பவரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியில் தன்னுடைய 14 வயது மனவளர்ச்சி குன்றிய மகன் ஆல்வினுடன் வசித்து வருகிறார் 44 வயதான சில்வியா டேனியல். இவரின் கணவர் வேலை தொடர்பாக பூனே பகுதியில் வசித்து வருகிறதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர்களின் அப்பார்ட்மெண்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டார் வாட்ச்மேனிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து அனைவரும் சேர்ந்து அந்த வீட்டின் கதவை தட்ட ஆல்வின் வந்து கதவை திறந்து இருக்கிறார். உள்ளே சென்று பார்த்ததும் தான் அழுகி போன சில்வியாவின் உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடக்பாடா காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் அமர்நாத் வாக்மோட் தெரிவிக்கையில், விசாரணையில் அந்த பெண் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக தெரிகிறது. ஆனால் மகனுக்கு அது தெரியாமல் போக அவருடனே இருந்து இருக்கிறான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மனநல மருத்துவர் டாக்டர் ஹரிஷ் ஷெட்டி கூறுகையில், இந்த சம்பவத்திற்கு யாரையும் குறை சொல்லவிட முடியாது. ஆனாலும் தற்போதைய சமூகத்தில் இந்த பிரச்னை உள்ளது. அண்டை வீட்டார் வெளியில் இருப்பதை உணர்ந்தால் அவர்களுக்கு முன்பெல்லாம் உதவுவார்கள். இப்போது அப்படி இல்லை என்றார். விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு கணவரிடம் அவர் உடல் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…