மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவின் எதிர்காலம் கேள்விக்குறியான சூழலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2025 ஐபிஎல் மெகா ஏலம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா நீடிப்பது பற்றி ஏராளமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான விதிகள் மற்றும் ஏலத்திற்கான தேதி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும், 2025 ஐபிஎல் மெகா ஏலத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை விடுவிக்கும் அல்லது மெகா ஏலத்தில் ரோகித் சர்மா இடம்பெறலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணையலாம் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகிறார்.
கடந்த ஐபிஎல் தொடரின் போது மும்பை அணி நிர்வாகம் மற்றும் ரோகித் சர்மா இடையே விரிசல் போன்ற சூழல் உருவானது. மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை அந்த அணியின் கேப்டனாக அறிவித்தது. மும்பை அணியின் இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. எனினும், ரோகித் சர்மா இந்த விவகாரம் குறித்த எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.
“அவர் இருப்பாரா அல்லது செல்வாரா? என்பது மிகப்பெரிய கேள்வி. தனிப்பட்ட முறையில், அவர் இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். அணியில் தக்க வைக்கப்படும் யாராக இருந்தாலும், அவர் பெயர் டோனியாக இருந்தால் மட்டுமே மூன்று ஆண்டுகள் அணியில் இருக்கலாம் என்று நினைப்பார்கள். எம்எஸ் டோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் சர்மா மற்றும் மும்பை இந்தியன்ஸ் கதை வித்தியாசமானது. என்னை பொருத்தவரை அவர் அணியில் இருந்து விலகுவார் அல்லது மும்பை அணி அவரை விடுவிக்கலாம்.”
“என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், ஆனால் ரோகித் தக்கவைக்கப்படுவார் என்று நான் நினைக்கவில்லை. என்னிடம் எந்த தகவலும் இல்லை, ஆனால் ரோகித் அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என்றே உணர்கிறேன். ஏலத்திற்கு வராமல் வர்த்தக முனையத்தில் அவர் வேறு அணிக்கு மாறலாம், இது நடக்காத பட்சத்தில் அவர் ஏலத்தில் இடம்பெறலாம். மும்பை இந்தியன்ஸ் அணியில் அவரது பயணம் முடிந்து விட்டதாகவே நான் நினைக்கிறேன்,” என்று யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…