இந்தாண்டு ஜனவரி மாதத் துவக்கத்திலிருந்து நேற்று வரை தமிழகத்தில் பலவகையான காய்ச்சல்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விவரங்களை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமனியன் வெளியிட்டுள்ளார். சென்னை தியாகராயா நகரில் மழைக்கால நோய் தடுப்பு மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அவர் இந்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2017ல் டெங்கு பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக இருந்தது. இதனால் அறுபத்தி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்த அமைச்சர், மழைக்கால நோய்கள் பரவல் இப்போது கட்டுக்குள் இருப்பதாக சொன்னார். இந்தாண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து நேற்று வரை தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் அறாயிரத்து ஐனூற்றி அறுபத்தி ஆறு பேர் (6566) என்றும்,
இதனைப் போலவே பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னூற்றி தொன்னூறு பேரும் (390) புளுயன்சா காய்ச்சலால் ஐம்பத்தி ஆறு பேரும் (56), உன்னி காய்ச்சலால் இரண்டாயிரத்து அறனூற்றி முப்பத்தி ஒன்பது பேரும் (2639), எலிக்காய்ச்சலுக்கு ஆயிரத்து நானூற்றி என்பத்தி ஓரு (6481) பேரும், வெறி நாய்க்கடி மற்றும் மஞ்சள் காமாலை நோய்க்கு இருபத்தி இரண்டு (22), பதினேழாயிரத்து ஐனூறு (17,500) பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விவரத்தினை சொன்னார்.
டெங்கு பாதிப்பில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் உரிய நேரத்தில் டாக்டர்களை அணுகாததால் தான் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெளிவுபடுத்தினார். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தால் மருத்துவர்களை கட்டாயம் அணுகி அவர்களிடம் ஆலோசனை மற்றும் மருத்துவம் பெறவேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவுறித்தியுள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…